உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

199

கொல்ல முற்பட்டு நின்றனர். அருகிலிருந்த ஒரு பெரியார் அவர்களை நோக்கிப் புன்முறுவலுடன் ஓர் அறிவுரை கூறினார்.

'இவள் பழி செய்ததற்காகத்தானே கல்லெறிகிறீர்கள்?'

என்று அவர் கேட்டார். 'ஆம்' என்றனர் அவர்கள்! 'மெத்தச் சரி, உங்களிடையிலும் பழி செய்தவர்கள் இருக்கலாம். ஆயினும் தன் வாழ்வில் ஒரு பழியும் செய்யாதவனான ஒருவனே முதல் கல் எறியட்டும். அதன்பின் மற்றவர்கள் எறியலாம்' என்றார் பெரியார்.

கல்லெறிய முனைந்தவர் இதை ஏற்றுக்கொண்டவர்கள் போல நின்றனர். ஆனால் எவரும் முதல் கல் எறிய முன் வர வில்லை. நெடுநேரமானபின் பெரியவர் பேசினார்:

‘உங்களில் ஒருவர்கூட ஒரு பழியும் செய்யாதவர் என்று தன்னைக் கருத முடியவில்லை. அப்படியிருக்கப் பழி செய்த இந்த அபலைமீது மட்டும் இவ்வளவு கோபம் ஏன்? கல்லெறிய முனைவது ஏன்?' என்று கேட்டார்.

அவர்கள் அனைவரும் வெட்கி அப்பெண்ணை விட்டு

விட்டுப் பேசாதகன்றனர்.

பெரியவர் பழி செய்யாதவர், தூயவர் என்பதைப் பெண் அறிந்துகொண்டாள். அவள் தன் பழிகள் நினைந்து அஞ்சி நடுநடுங்கி அவர் தாளில் விழுந்து வணங்கினாள். 'பழியறியாத தூயவராகிய நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டு மானாலும் கொடுங்கள். என் பிழை பொறுங்கள்!' என்றாள்.

'பழி செய்தவர்கள்தானம்மா பழி செய்தவர்களைக் கண்டிப்பார்கள். தன் பழி அறியாததனால் அவர்கள் உள்ளத்தில் எழும் ஆத்திரம் அது. அதுமட்டுமன்று. தம் பழிக்குத் தண்டனை கோர, திருத்தம் வேண்டக்கூட அவர்கள் மனங் கொள்ள வில்லை. ஆனால் தம்பழி அறிந்தபின் அவர்கள் உன்னைக் கண்டிக்கவில்லை. அதுபோல, நானும் உன்னைக் கண்டிக்க மாட்டேன், தண்டிக்கவும் விரும்பவில்லை. உனக்கு நான் கூறுவதெல்லாம், "இனிப் பழி செய்யாதே. அமைதியுடன் போ" என்பதே" என்றார்.

"