உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

217

நீயாக அவாக்கொள்கிறாய். அந்த அவாக்களை நீ அடக்கி யாண்டு இயக்குவதற்கு மாறாக, அவை உன்னை அடக்கியாண்டு இயக்கும்படி விட்டுவிடுகிறாய். அவை உன்னைத் துன்பச் சேற்றிலும், ஆரிடர் இடக்குகளிலும் இழுத்துச் சென்று கலக்க மளிக்கின்றன, நீ கலங்குகிறாய். அந்த அவாக்களை நீ அடக்கி யாண்டு இயக்குவதற்கு மாறாக, அவை உன்னை அடக்கியாண்டு இயக்கும்படி விட்டுவிடுகிறாய். அவை உன்னைத் துன்பச் சேற்றிலும், ஆரிடர் இடக்குகளிலும் இழுத்துச் சென்று கலக்கமளிக்கின்றன, நீ கலங்குகிறாய். அந்த அவாக்களை அடக்கு, விட்டுவிடு. நீ மகிழ்வின் எல்லை காண்பாய்.

நீ துயரத்தின் ஏலமாட்டா அடிமையல்ல. எல்லையற்ற உவகையென்னும் மணப்பெண் உன்னை அரவணைக்கத் துடிதுடித்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். உன் வருகைக்காக இமை கொட்டாது வாயிலிலிருந்து வைத்த கண் வாங்காது துயிலொழித்திருக்கிறாள். இருளுருக்களின், பழிசேர் பேய்க் கனவுகளின் சிறையாளனல்லை. நீ உன்னை யறியாமல் உன் உறக்கத்தினிடையே தூய திருவார்ந்த நிறையொளிக் கதிர்கள் உன் கண்ணிமைகளில் வந்தாடுகின்றன. நீ எக்கணம் துயி லொழித்து, அதனைக் காண்பாயோ என்று அவை காத்துக் கலங்கி நிற்கின்றன. துயிலிடை இதனை அணுகி உணர்ந்தால், நீ துணிவுடன் கண் திறந்து துயரெலாம் தீர்வாய்.

திக்குத்திசையற்ற கடலில் நெளியும் பாம்புகளிடையே உழல்வதாகக் கருதும் நீ கண்திறந்தால் கடலலைகள் மெத்தை தலையணைகளே என்றும், நெளியும் பாம்பு உன் காதற் பசுங் கொடியே யென்றும் காண்பாய். ஆகவே துணிந்து கண் விழித்துப்பார். அக்காதுகளில் வந்து மோதும் கடலின்

ரைச்சலாக நீ கருதுவது உன்னை எழுப்ப அவள் இனிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பள்ளியெழுச்சியே என்பதை விழிப்புணர்வுபெற்ற உன் காதுகள் அறியும். மடமையை உதறித் தள்ளி அறிவில் விழித்தெழுவாய்.

தூய்மை கணவன், கற்புடைப் பெண்மை இன்பம்

மறதியில் ஆழ்ந்த துயிலில், அதே சமயம் பேய்க்கனவுகள் ஆட்டிப்படைக்கும் துயிலில் பழியின்பழி, மடமை, அறியாமை