உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. மோனநிலை

1சும்மா இரு, வாழ்வின் மணி மகுடம் துய்தாகிய மோனம்; உன் நீள் நாளில் பொய் மாய, ஓரோரை ஒதுக்கிடுவாய் பொன்னார் அமைதிக்கென; வீணுரையே நம் வாழ்வினரும் பெருங்கூறு, நலம் நாடுத லரிதிது ஓர்ந்திடுவாய்! பேசாதிரு, பேசும் தகையார்ந்த பீடார்தரு பொன்னுரை நாடிடில்நீ கூசா தொழி வம்புரை கட்டுரையே குறைநேர மதேனும்; அதன்பயனாய் காசார்தரு பொன்மொழியாம் மோனம் கருத்தாழ்தர ஆய்ந்துணர் வதுபெறுவாய்.

2சும்மா இரு மனமே! வெம்மாய உலக வாழ்வினில் மென்மே லழன்றுழலா தொரு

புன்மா கணமதுவாகிலும்,

விம்மாது வெய்துயிரா திரு!

சும்மா இருமனமே!

நன்மாகண மொன்றாகிலும்,

தன்னோ டொருதனி யாகலின்

பொன்மாண்பினுக் கஞ்சாதிரு!

சும்மாஇரு மனமே!

- ஏ.எல். சால்மன்.

ஏர்னெஸ்ட் கிராஸ்பி

மெய்யுணர்வுடையவன் சொற்கள் ஆற்றல்வாய்ந்தவை. ஆனால் அவன் சொல்லாடாமோனம் இன்னும் ஆற்றல்மிக்கது.