பேரின்பச் சோலை
237
காட்டுகிறது. அரிதில் குரைக்கும் வேட்டை நாயின் பயங்கர மோனம் அதன் ஒருமுகப்பட்ட விடாப்பிடிக்கும் இறுதி வற்றிக்கு உரிய முன்னிணைவு நிலையேயாகும். இந்த ஆற்றலாலேயே அந்நாய் வேட்டைக்குச் சிறந்ததாகப் புகழ் பெற்றுள்ளது. வேட்டை நாய் உவமை இதன்மிகக் கீழ்ப்படியி லுள்ள தகாத்தளத்திலுள்ள ஓர் உவமை என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லாப் படியிலும் இயற்கையின் தத்துவம் ஒன்றே.
வீம்புரை பகர்பவன் என்றும் வெற்றி காண்பதில்லை. அவன் கருத்து வெற்றிக்குரிய செயலின் நோக்கத்தில் நிற்காமல் வேறு திசையில் முதலிலேயே திரும்பி விடுகிறது. அவன் ஆற்றல் திறங்களும் முற்றிலும் தன் பெருமையைத் தான் நிலை நாட்டுவதிலேயே சிதறி விடுகிறது.
தன்னல அவாக்களுடையவன் நிலையும் இதுவே. செய்ய வேண்டும் செயலில் ஒரு பகுதியும், அவன் ஆவலை நிறை வேற்றும் உணர்ச்சிகளில் ஒரு பகுதியுமாகச் சக்திகள் பிரிவுற்று விடும். போரில் திறமையற்ற படைத்தலைவன் படையை ஓரிடத்தில் ஒருமுகப்படுத்தாமல் பிளவுபடுத்தி அடையும் தோல்வி போன்றதே இது.
ஆற்றலைப் பிளவுபடுத்துவதில் எவ்வளவு கேடோ, அதில் குறைந்ததன்று, தேக்கப்பட்ட ஆற்றல் வெளிச்செல்ல ஒரு சிறு வாயில் திறந்து வைத்திருப்பது. மிகத் தேர்ந்த ஆற்றலுடைய வர்கட்கும் அவாக்கள் இத்தகைய வாயில்களாய் அமைகின்றன. நீராவியைத் தேக்கிவைக்கும் இயந்திரத்தில் வெளிச்செல்லும் புழைவாய் அடைபடாதிருந்தால், இயந்திரத்தின் ஆற்றல் ஒரு சிறிதும் பயன்படாது, தற்பெருமை, சிறுமை, தற்புகழ்ச்சி, வீம்புரை, அவாக்கள் ஆகிய இவைகளை அடக்கி, பணிவு, மோனம், அறிவுக் கூர்மை முன் கருத்துடைமை ஆகிய பண்பு களை மேற்கொண்டவன் அடையும் வெற்றி போக்குபுழை அற்ற செறிந்த நீராவியடக்கிய இயந்திரத்தின் செயல்வெற்றி போன்றதாகும். ஏனெனில் அத்தகையவன் உள்ளமும் உணர்வும், அறிவும் ஆற்றலும், முயற்சியும் ஓய்வும் எல்லாம் செயல் வெற்றியும் ஒருமுகப்பட்டு ஒன்றுபட்டுச் செயலாற்றும்.
ருந்தவன் எழுந்திருப்பதற்குள் நடந்தவன் காதவழி என்பது பழமொழி. வீம்புரையாளன் தன்னைப் பற்றிப் புகழ்