உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(238) ||

அப்பாத்துரையம் - 29

பாடிக் கொண்டிருக்கும் நேரத்திலே, அமைதியாளன் செயல் செய்யத் தொடங்கிவிடுவான். வீம்புரையாளன் செயல் தொடங்கிய பின்னும் அவன் உள்ளம் தன்புகழ் மீதே பெரிதும் சுற்றிக்கொண்டிருக்குமாதலால், அமைதியாளன் அவனை விஞ்சி சென்றுவிடுவான்.

வெற்றியில்

நெடுந்தொலை

இவ்

வாறாக அமைதியாளர் உணர்ச்சியாற்றலையும் அறிவாற்றலை யும் முழுதும் தேக்கிவைத்துக் கொள்வதால், அவற்றைச் சிதறடிக்கும் உணர்ச்சி வெறியர்களைக் கடந்து, அவர்களையே எளிதில் ஆட்கொண்டு விடுகிறார்கள்.

கவிஞர் செகசிற்பியர் நாடகங்களில் இயற்கையோ டொட்டிய இந்த வாழ்க்கைப் பண்பு கலையில் நேர்மையுடன் பதிவாவதைக் காணலாம். சார்லஸ் போன்ற ஆரவார வீம்புரையாளர்களை ஆர்லண்டோ போன்று அமைதியும் பணிவும் வாய்ந்தவர்கள் எளிதில் வென்றுவிடுகிறார்கள்.

அமைதியே வெற்றிதரும் வலு

அமைதியே வலிமை என்பது எல்லா இடத்துக்கும் காலத் துக்கும் பொருந்துவதான ஓர் இயற்கை அமைதி. இதனை உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலுமே காண்டலாகும். வாணிகத் தில் ஈடுபட்டவர்கள் தம் திட்டங்கள், முறைகள், சூழ் நிகழ்ச்சிகள் கியவற்றைப் பற்றி வம்பளக்காமலிருந்தால்தான், அவர்கள் வெற்றியடைவார்கள். அவற்றைப் பற்றி ஓயாது பேசினால் அவர்கள் தோல்வியடைவது உறுதி. இது போலவே ஆன்மிக ஆற்றலும் செல்வாக்கும் வேண்டுபவன் தன்னைப் பற்றியோ தன்

ன்மிக வெற்றிகளைப் பற்றியோகூட வாயாட மாட்டான். அவ்வாறு பேசினால், பேசுகிற நேரத்திலேயே அவன் ஆன்மிக ஆற்றல் குறையத் தொடங்கிவிடும்.

மில்ட்டனின் நாடகத்தில் தலைமுடி வெட்டியவுடன் ஆற்றலிழந்துவிடும் சாம்ஸனைப் போல அவன் வலிமை இழந்து விடுவான்.

உலகியலிலும் சரி, ஆன்மிகத் துறையிலும் சரி - வெற்றி என்பது வலிமை, மோனம், அமைதி, உறுதியான நோக்கம் ஆகிய பண்புகளின் பணியாளேயாகும்.