உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

-

11

உங்கள்

ஆர்வம் செயலாற்றும். நாள்தோறும், ஓரைதோறும், கணம் தோறும் உங்கள் எண்ணம், நடையுடை தோற்றம், உங்கள் சொல்லும் செயலும், விருப்பு வெறுப்புக்களும், வாழ்க்கை முழுவதும் - அதை ஆக்க அழிக்க வலிமையுடையன. அதே சமயம் இவற்றால் உங்கள் வாழ்க்கையும் வளமும் ஆக்கப்படுவன. இத்தகைய தொடக்கங்கள் மூலமே நீங்கள் புற உலகாகிய இயலுலகிலும் சரி, உங்களைப் போன்ற பிற மனிதரின் உலகாகிய புற உலகிலும் சரி, உங்களுக்கென ஓர் ஆட்சிச் சூழலை அமைத்துக்கொள்ள முடியும்.

வைகறைத் துயிலெழு!

அருளார்ந்த பேரின்ப வாழ்வை நீங்கள் அடைய விழைந்தால், நீங்கள் கைக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு நற் றொடக்கம் உண்டு. அதுவே ஒவ்வொரு நாள் வேலையின் தொடக்கமுமாகும். இதில் நன்கு கவனம் செலுத்திச் சரியான முறைகளைக் கையாள வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் நீ எப்படித் தொடங்குகிறாய்? எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாய்? உன் கடமைகளை எவ்வாறு தொடங்குகிறாய்? என்ன உளப்பாங்குடன் நாளின் புதுப்பணியில் புகுகிறாய்?

இந்தக் கேள்விகளை நீயே உன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பற்றி உன் இதயத்துக்கு நீ தரும் விடைகளைப் பொறுத்தவை, அந்நாளிலும் அது தொடர்ந்த பல நாட்களிலும் நீ பெறும் உண்மையான இன்ப துன்பங்கள்! உன் நாள் வேலை அறிவுடன், அமைதியுடன், திட்டத்துடன் தொடங்கப் பெற்றால், அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்ச்சிக்கோவை முரணிலா நல்லிசையுடையதாகவும், இன்பகரமானதாகவும் இயங்கும். அது மட்டுமன்று, அப்பழக்கமே நாள் பழக்கமாகி வாழ்நாள் முழு வதையும் முழு நிறை பேரின்பத்துக்குப் பெரிதும் குறையாத நல்வாழ்வு ஆக்கிவிடும்.

வைகறையில் துயிலெழுவது நல்தொடக்க மட்டுமன்று; வலிமை தரும் நல்தொடக்கமுமாகும். உன் உலகியல் கடமை களுக்கு அப்படி எழுவது இன்றியமையாத் தேவையாய் ல்லாதிருந்தால்கூட, அதை ஒரு கடமையாக்கும் செயலில்