உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

நற்றொடக்கம், அல்தொடக்கம்!

அப்பாத்துரையம் - 29

தொடக்கங்களில் நற்றொடக்கமும் உண்டு.தீத்தொடக்கமும் உண்டு. வினையும் வினைவிளைவும் நன்மை தீமைப் பாகுபாடு பெறும்பகுதி இதுவேயாகும். தொடக்கக் கூறு உயிர்க்கூறு அல்லது அறிவுக்கூறு ஆதலால், அத்தொடக்கத்தில் நாம் நம் அறிவால் தீத்தொடக்கத்தை நற்றொடக்கமாக ஆக்கலாம். நம் அறியாமையால் நற்றொடக்கத்தைத் தீத்தொடக்கமாக்கி வினையும் விளைவும் கெடுத்துக்கொள்ளலும் ஆகும். 'நற் றொடக்கம் பாதி முடிவு' என்ற பழமொழி மிகையுரையல்ல, குறையுரையே என்பதை இது காட்டும். ஏனென்றால் முடிவின் முழுப்போக்கையும் - அதன் ஆக்கத்தையும் அழிவையும் அறுதிப்படுத்தும் பகுதி அதுவேயாகும்.

-

ஆர்ந்தமர்ந்த சிந்தனையால் நாம் தீத்தொடக்கத்தை அறவே விலக்க முடியும். நற்றொடக்கத்தை உண்டு பண்ண இயலும். போதிய அறிவார்ந்த சிந்தனையால் -அஃதாவது திட்டப் பண்பால் - நாம் நற்றொடக்கத்தைப் பொங்கல் பெருவளமார்ந்த தொடக்கமாகவும் ஆக்கிவிடத் தகும்.

நம் உரிமைக்குப் புறம்பாக, நம்மால் கட்டுப்படுத்தி அடக்கி யாள முடியாத தொடக்கங்கள் உண்டு - இவை புறத்தே, இயற்கை உலகில் நம்மைச் சுற்றிலும் உள்ள சூழலிடையே அல்லது நம்மைப்போலவே தன்னுரிமையுடைய மற்ற மக்களிடையே

உள்ளன.

இந்த இருவகைத் தொடக்கங்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. உங்கள் ஆற்றலையும் கவனத்தையும் நீங்கள் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டுக்கும் உரிமை யாட்சிக்கும் உரிய தொடக்கங்களுக்கே பயன்படுத்தினால் போதுமானது. ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் சிக்கல் வாய்ந்த அமைப்பின் ஒவ்வொரு கூற்றையும் - அப்பின்னல் வலையின் ஒவ்வோர் இழையையும் - ஆக்குபவை இவையே. இவை உங்கள் எண்ணங்களில் உருவாகி, உங்கள் ஆர்வச் செயலில் வளர்ந்து, உங்கள் வாழ்க்கையுடன் வாழ்க்கையாகப் பயன் நிறைவு அளிப் பவையாகும். இவற்றின் தொடக்கம் எப்படி உங்கள் ஆட்சியி லிருக்கிறதோ, அதுபோலவே தொடர்சங்கிலியும் உங்கள் வசமே அமைகிறது. அதன் ஒவ்வொரு படியிலும் உங்கள் மனப்பாங்கு,