(268) ||
அப்பாத்துரையம் - 29
சார்ந்திருக்கும் பொருள் இன்னொன்றைச் சார்ந்ததாயின், எதிர்பாராத சமயம் அச்சார்பொருள் விலக, அவன் வீழ்ச்சியுற்று வெந்துயர் அடையநேரும். அழியத்தக்க கூளங்களின் மையங்களை அவன் தன் மையத் தளமாக்கினால், சூழல் முழுவதுமே அழிவுற்று, அவன் அச் சூழல்வளங்களின் நடுவே, அவற்றின் மையத்தில் கிடந்து மிதந்து அவதிப்பட நேரும். கடல் நடுவே கிடந்து நீர்விடாயால் வாடுபவன் நிலைமையை அவனது அப்போதைய நிலைக்கு ஒப்பாகக் கூறலாம்.
வேறு எவர், எதன் சார்பும் நாடாமல், மனிதன் தற்சார்புடன் தன்னை நம்பியே நிற்பானாக. அவன் எவர் உதவியும் கோர வேண்டாம். எவரிடமும் தனிப்பட்ட உதவி கோரிக் கெஞ்சத் தேவையில்லை. அவன் இரந்து குறைப்பட வேண்டியதுமில்லை. குறைகூற வேண்டியதுமில்லை. அவாவவும் வேண்டாம். கழிவிரக்கம் கொள்ளவும் வேண்டாம். தன்னுள் நிலவும் வாய்மையையே தனக்குத் தஞ்சமாகக் கொண்டு, தன் உளச் சான்று தனக்களிக்கும் அமைதியே கொழுகொம்பாகக் கொண்டு நிற்பானாக.
உன் ஊன்றுதளம் உன்னுளே!
தன்னுள்ளேதான் அமைதி காணாதவன் வேறு எங்கே போய்த்தான் அதைத் தேட முடியும்? தன்னுடனே தான் தனியிருக்க அஞ்சுபவன் வேறு யாருடன் இருந்துதான் என்ன தோழமை பெறக்கூடும்? தன் உள்ளக் கருத்தில் தான் தோய்வுற்று அதில் இன்பங்காண முடியாதவன் பிறர் கருத்துத் தொடர்பால் துன்பம் கொள்ளாதிருப்பது எவ்வாறு? - ஆம். இவைபோலவே, தன்னுள்ளே தனக்கு நிலைபேறாத நிற்க ஒரு தளம் காண முடியாதவன் வேறு எங்கும் ஒரு சிறிது நின்று ஓய்வுபெறத் தக்க டம்கூடக் காண்பது அரிதினும் அரிது. முடியாதது.
தன் இன்பம் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களைச் சார்ந்தது என்றோ, புறப்பொருள்களைச் சார்ந்தது என்றோ கருதுபவர்கள் பலர் உண்டு. அது ஒரு மயக்கம், ஓர் ஆராய்ந்து காணப்படாத மூடநம்பிக்கை. அதன் பயனாக இடைவிடாத ஏக்கங்கள், கழி விரக்கங்கள், அழுகைக்குரிய வாதனைகள் உண்டாகின்றன. வைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனிதன் மேலும் அமைதி