உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

(273

தம்மைச் சீர்செய்துகொள்ள முற்படமாட்டார்கள். பிறர் கருத்துக்கள் பிறர் சூழலின்படி, பிறர் அனுபவத்தின்படி மாறு படுவன என்பதும், அவற்றின்படி ஒழுகுவதால் தம் பொறுப் புக்குப் புறம்பான சூழலில் தாம் சென்று, தம் அறிவு மழுங்க நேரிடும் என்பதும் அவர்கட்குத் தெரியும். பிறர் புகழுக்காக உழைப்பதும், பிறர் இகழுக்காக உழைப்பை மாற்றுவதும் இதுபோன்ற தவறான செயலேயாகும். அது தம் மனிதத் தன்மையையே பிறரிடம் பணயம் வைப்பதுபோன்ற இழிசெயல் ஆகும்.

தற்சார்பே தன் வாழ்வின் ‘ஏண்’, சமதள மையம்

மனிதராயினும் சரி, தேவராயினும் சரி - பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, எவர் வழியிலும் நில்லாமல், எவர் உதவியும் இல்லாமல், தன்னையே தான் பற்றித் தனியே நிற்க நீ பழகும்வரை, நீ கட்டற்றவன் ஆகமாட்டாய், தன்னுரிமையுடைய வனாகமாட்டாய். தன் இன்பத்துக்குத் தான் உரிமைப் பட்டவனும் ஆகமாட்டாய். உன்னுள் இருக்கும் ஒளியறிந்து, அது வழிகாட்ட, உன் உறுதி மீது நீ நிற்கப் படித்த அன்றே, நீ இன்ப உரிமையாளனாவாய். ஆனால் தனி நிலை, தற்பொறுப்பு என்பதுவே, தற்பெருமை, செருக்கு என்று எண்ணிவிடாதே. ஏனெனில் பிறர்வழி நிற்பதைவிட மோசமானது தற்பெருமை வழி நிற்பது. அது கல்போல் இருக்கும் நுரைமீது நிற்க எண்ணு வது போன்றது.

உண்மையில் தற்பெருமையுடன் தற்பொறுப்புடையவன் ஆகவே முடியாது. அவனைவிடப் பிறர் வயப்படுபவன்,பிறர்வழி நிற்பவனைக் காண்டல் அரிது. முகப்புகழ்ச்சிக்கே அவன் முற்றிலும் ஈடுபட்டுப் பணிவதால், அவன் பிறரிடையேகூட நல்லவர் வழி நிற்பானென்று கூற முடியாது. புகழ்ச்சிமட்டு மன்று, இகழ்ச்சிகூட அவனை இயக்கிவிடும். ஏனெனில் கழ்ச்சிக்கு எதிராக நடக்க அவன் விரைவான். சில சமயம் இகழ்ச்சிமீது எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் அதைப் பின்பற்றி நடக்கவும் முனைவான். அவன் இன்பதுன்பங்களல்ல, மகிழ்ச்சி துயரங்களல்ல, அமைதி இன்பதுன்பங்களல்ல, மகிழ்ச்சி துயரங்களல்ல, அமைதி கொந்தளிப்புக்கள்கூடப் பிறர் விருப்பம் சார்ந்தவை ஆகிவிடுகின்றன.