பேரின்பச் சோலை
1275
னெனில் தற்பணிவே தற்பண்பின் தாய்த்திறம். தற்சார்பு மிக்கவர்கள் எப்போதும் தற்பணிவு மிக்கவர்களாகவே இருப்பர். இத்தற்பணிவிலே, தற்பண்பிலேதான் தன்மதிப்பு அடங்கி யிருக்கிறது - தற்பெருமையிலோ, செருக்கிலோ, தன் முனைப் பிலோ அல்ல. எந்த உயர்குடிக் கோமானும், எந்த அரசுரிமை இளவரசும் ஞானியின் தற்பணிவின்முன் தன் பெருமை நிலைநிறுத்த முடியாததன் காரணம் இதுவே.
ஞானி ஏன் இவ்வளவு பணிவு காட்டுகிறான்? அவனுக்கு வேறு பெருமை தேவையில்லை. கடவுளருளின் பெருமை, உச்ச உயர் எல்லைவாய்ந்த பெருமை அவனிடம் போதுமான அளவில் நிரம்பியுள்ளது என்பதே அதன் காரணம்.
பெரியார் வழியை உன் வழியாக்கு
எல்லா மனிதரிடமிருந்துமே நீ படிப்பினைகள் கற்றுக் கொள். ஆனால் சிறப்பாக, வாய்மையின் வேந்தர் அறிவுரைக்கு உன் உள்ளத்தின் ஆழத்திலே இடமளி. ஆனால் இப்படிப் பினைகள் யாவும் உனக்குத் தூண்டுதல்களே தவிர, நேர் வழி காட்டிகளல்ல என்பதை மறவாதே. அவற்றிலிருந்து உனக்கு வழிகாட்டும் கருத்துக்களை மேற்கொள்ளும் பொறுப்பு உன் னுடையது. அதை வகுத்தமைக்கும் உண்மை வழிகாட்டி உன்னுள் இருக்கும் ஒளியே என்பதை மறவாதே.
உலக ஆசாரியர் ஒருவர் 'இதோ இருக்கிறது நேர் பாதை!’ என்று சுட்டிக் காட்டக்கூடும். ஆனால் அதன்வழி நீ நடக்கும்படி அவர் உன்னைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. உனக்காக அவர் அதில் நடந்துசெல்லவும் முடியாது. நடக்க விரும்புவது, துணிவது நீ; நடப்பதும் நீயே; நடந்து அதன் பயன் நுகர்வதும் நீதான். ஆகவே அதுபற்றிச் சிந்தி. அதை உன் ஒளியுடன் கலந்து ஆராய்ந்து, உன்னால் ‘ஏற்கத்தக்கதா, பின்பற்றத்தக்கதா, செய்யக் கூடியதா' என்று பார். ஏற்பதென்று உன் ஒளி முடிவு செய்தால், அதன்பின் அதை உன் முடிவாக்கு. உன் பாதையாக்கி, அதில் முனை.
நீயாக முயன்று, உன் வலிமை முழுதும் ஈடுபடுத்தி, ஆசாரியர் கண்ட வாய்மையை உன் சார்பிலேயே உன் வாய்மை யாக்கு. ஆசாரியர் உனக்குரிய புறத்தூண்டுதல்களில் ஒரு சிறந்த