உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

13

மாள்வே வாழ்வாக அவன் முடிவுறவும் நேர்கிறது. தன்நெகிழ்வும், மடிமையும், தற்சலுகையும் இதே நிலைக்கு மனிதனைத் தள்ளு கின்றன. மடிமை தற்சலுகையாகவும், தற்சலுகை மடிமையாகவும் மாறி மாறிப் பெருகுகின்றன. முதல் மடிமை தற்சலுகைக்கு இடம் தந்தபின், தற்சலுகை மடிமையை ஓர் இன்றியமையாத, எல்லை யற்று வளரும் பண்பாக மாற்றி விடுகிறது.

மடிமையால் விளையும் பெரிய இன்னல்களைப் பொது வாக ஆடவர் பெண்டிர் எண்ணிப் பார்ப்பதில்லை. அது உடல்வலுவும் மன வலுவும் கெடுக்கிறது. பொருள் இழக்கச் செய்கிறது. அறிவு இழக்கச் செய்கிறது. இன்பம் இழக்கச் செய்கிறது.

நாள் வேலையின் முதல் கட்டுப்பாடாக, முதல் வேலையாக, விடியுமுன் எழுந்திரு. எழுந்திருக்க அவசியமில்லாவிட்டாலும் எழுந்திரு. எழுந்தவுடன் வேறு வேலையில்லாதிருந்தால்கூட, அது காரணமாகச் சோம்பியிராதே. வெளியே சற்று உலவி உடலுக்குத் தெம்பு உண்டு பண்ணிக்கொள். அதனுடன் இயற்கைக் காட்சிகளின் அழகில் உன் பொறி புலன்களையும் உள்ளத்தையும் தோயவிடு. இதனால் ஏற்படும் மனஅமைதி, கிளர்ச்சி, புது விருவிருப்பு வாழ்வில் உனக்கு விலை மதிக்க முடியாத செல்வமாக வளரும். சும்மா இருக்க நேரும் நேரத்தை இப்பழக்கம் உனக்கு ஒரு சொத்தாக்கிவிடும்.

ஒரு நாள் முயற்சி அடுத்த நாள் முயற்சிகளைத் தானே பிறப்பித்துவிடும். காலையில் எழுந்திருக்கும்போது, அதனால் மனம் முதலில் கருதிய நோக்கம் எதுவும் இல்லாவிட்டால்கூட, இயல்பான பல இன்னலங்கள் விளைகின்றன. காலை நேரத்தின் மோன அமைதி உள்ளத் தெளிவையும் சிந்தனை அமைதியையும் ஊக்குகிறது. காலையுலாவோ தொடர்ந்த சிந்தனைப் பழக்கத்தை உண்டுபண்ணுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் சிக்கல் களையும், தானும் பிறரும் கண்டுணர வைக்கிறது. இப்பழக் கங்கள் தொடர்வதன் மூலம் வாழ்க்கையில் மனிதன் இயற்கைச் சூழலுடனும் சமுதாயச் சூழலுடனும் முற்றிலும் ஒத்திசைந்து வாழ முடிகிறது. சிக்கல்கள் யாவற்றையும் தெளிந்த உள்ள த் துடனும் தெளிந்த சிந்தனையுடனும் மெய்யறிவாலும் விடு வித்துப் புத்துரம் பெற இயலுகிறது.