உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

காலை வேளையின் ஆன்மிக வளம்

அப்பாத்துரையம் - 29

காலைநேர அமைதி உண்மையில் ஓர் இயற்கைச் செல்வம், ஓர் ஆன்மிக வளம். அதன் தெய்வீக மோனம் கலங்கிய புண் பட்ட மனித உள்ளங்களுக்கு ஓர் இன்மருந்து. இன்னதென்று பொது அறிவுக்கு விளங்காத இந்த அமைதி உண்மையில் வாழ்க்கையின் நோக்கத்தில் கருத்தூன்றவைக்கும் மெய் யறிவமைதியாகும். துன்பத்தில் துவளவைக்கும் மடிமைக்கு இது நேர்மாறானது.ஏனெனில் துன்ப மலைகள் தாண்ட, இடையூறு என்னும் ஆழ்ந்த பள்ளங்கள் தாவ, கடுஞ்சிக்கல்களை விடு விக்கவல்ல மெய்யுரத்தை இது மனிதனுக்கு அளிக்கிறது. இவ்வமைதியை ஊடுருவிவரும் காலைக் கதிரவனொளி பனியும் இருளும் விலக்குவது மட்டுமன்று. அதுவே உடலூடாக உள்ளத் துக்கும், உள்ளத்தினூடாக உடலுக்கும் உயிர் ஆற்றல் தூண்டுவது. அதுவே பொறிபுலன்களூடாக நரம்பு மண்டலத் துக்கும், நரம்பு மண்டலத்தினூடாகப் பொறி புலன்களுக்கும் புதுவாழ்வின் துடிப்பும் புதுக்கிளர்ச்சியும் தருவதாகவும் அமைகிறது.

காலைக் கதிரவனொளி உயிரொளி, தெய்வீக ஒளி. அத னூடாக மனிதன் உண்மை என்னும் ஒளிமலை ஏறி, பேரின்ப மென்னும் ஒண்முகில் வண்ணம் பெற்றுத் தன்னைச் சூழப் பேரின்ப ஒளிக்கதிர்கள் பரப்பும் ஆற்றல் எய்துகிறான்.

காலையின் நற்றொடக்கம் உள்ளத்துக்குக் களிப்பும் கிளர்ச்சியும், உடலுக்கு ஊட்டமும் சுறுசுறுப்பும் ஒருங்கே அளிக்கும். உணவு நேரத்திலே இவற்றின் முழுமணம் வீசும். இவற்றின் நல்லொளி குடும்பமெங்கும் பரவும். நாளின் கடமை களும் அலுவல்களும் இதே வகையில் தன்னம்பிக்கையுடனும் களியாட்ட எழுச்சியுடனும், ஒருவர்க்கொருவர் அன்புக் கனி வார்ந்த ஒத்துழைப்புடனும் விரைந்து நடைபெறும். நாள், நாட்படி அல்லது பஞ்சாங்கத்தின்படி எப்படியானாலும், வாழ்வின் ஆக்கப்பட்டியலில் நல்ல நாளாகவும், பல நல்ல நாள்களுக்குரிய தூண்டுதல் நாளாகவும் அமைவது உறுதி. உண்மையில் பஞ்சாங்கம் பார்ப்பவர் கவலையுடனே அதை அணுகுவதால், நாள் வேலை முழுவதும் இக்கவலை படராமல்

ராது. நேரம் நல்லநேரம் என்ற மனநிறைவுகூட இந்தத்