உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

15

தொடக்க மன உலைவை முற்றிலும் சரி செய்ய முடியாது. னால் காலையில் எழுந்து நல்லமைதியுடன் வேலை தொடங்குபவர் எந்தப் புறஉதவியுமில்லாமல் எல்லா நாட் களுமே நல்ல நாட்களாகப் பெறுவர்.

நல்ல நாள் கெட்ட நாள் எது?

நாளில் நல்ல நாள், கெட்ட நாள் என்பது கிடையாது. அதுபோலவே வாழ்நாளிலே எந்த நாளும் மிக முந்திவிட்ட நாளோ, மிகப் பிந்திவிட்ட நாளோ ஆய்விட மாட்டாது. எந்த நாளில் அவன் நல்தொடக்கம் மேற்கொண்டாலும் அது அவன் நல்வாழ்வில் அல்லது புதுவாழ்வில் முதல் நாள் ஆகிவிடத்தகும். அதிலிருந்து அவன் புதிய சிந்தனை, புதிய வாய்மொழி, புதிய செயல் தொடங்கலாம். அதிலிருந்து அவன் மெய்யறிவொளி யில், இன்ப ஒளியின் செங்கதிரில் புதிதாகக் குளித்தெழலாம்.

அது அவன் இளமையில் புத்திளமையாக, முதுமையில்கூட மறு இளமையாகத் திகழும்.

“ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தொடக்கம் ஒவ்வொரு காலையும் புத்துல காக்கும் வெவ்விய பழிகள் விழுத்துய ரடைந்தோர்க்கு இவ்விடத் துண்டோர் எழில்ஞாயிற் றொளி அதுவே,

எனக்கும் உனக்கும் விரும்பிய எவர்க்கும் ஈடில்பே ரின்ப வாயிலின் அழைப்பே!

சென்ற நாளின் பழிகள், தவறுகளை ஆழ்ந்து நினைந்து உள்ளத்தில் தோயவிடாதே. அது இன்றைய நாளில் நேரான வழியில் வாழ்வதற்குத் தடங்கலாய்விடும். நேற்றைய பிழைகள் நேற்றோடு போகட்டும். அவை இன்று நீ புதிய தூய வாழ்வு வாழத் தொடங்குவதைத் தடுக்க முடியாது.

இன்று தொடங்கு, புதிதாக, புத்தம் புதிதாகத் தொடங்கு! சென்ற நாட்களின் அனுபவங்கள் - வெற்றிகள் மட்டுமல்ல, தோல்விகள்கூட - உனக்கு இவ்வகையில் உதவிதரும். ஆனால் புதிய நற்றொடக்கத்தின் மூலம் பழைய வெற்றி முன்னிலும் நிறைநல் வெற்றியாவது திண்ணம். முன்னைய தோல்வியோ தன்