உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 29

அனுபவத்தை மட்டும் புதுமுயற்சிக்கு அளித்து அதை வெற்றி யாக்கும். இத்தகைய நல்தொடக்கமில்லாமல், நீ வேறெவ் வகையிலும் இவ்வாறு முன்னிலும் ஒளிபெற வாழ்வில் முன்னேற முடியாது. ஏனெனில் நாளின் முழுப்போக்கும் அந்நாளின் தொடக்கத்தைப் பொறுத்ததாகும். அத்தகைய நாளிலிருந்து தொடங்கும் புதுவாழ்வின் போக்கு முழுவதும் அந்நாளின் புத்தொளியைப் பொறுத்ததாகவே இயலும்.

பனியின் நற்றொடக்கம் திட்டமே

வாழ்வில் நாளின் நற்றொடக்கத்துக்கு அடுத்தபடி மற்றொரு தொடக்கம் உண்டு. அதுவே தனிப்பட்ட வேலை, பொறுப்பு வாய்ந்த பணி ஆகியவற்றின் புதுத் தொடக்கம் ஆகும். ஒரு கட்டட வேலையை எடுத்துக்காட்டாகக் கொள்ளுவோம். புதிய கட்டடம் தொடங்குவதில் மிகச் சிறந்த முறை யாது? அது கட்டடத்தின் எப்பகுதியையும் உடனடியாகக் கட்டுவதன்று, கடைகாலிடுவது கூட அன்று. முழுக் கட்டடத்தின் மாதிரி யையும், திட்டமிட்டு அத்திட்டத்தின் எல்லாக் கூறுகளையும் நன்கு சிந்தித்து அமைப்பதாகும். இது பின்னுள்ள வேலை முழுவதையும் எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்ற உதவும். கடைகாலிலிருந்து கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியையும் திட்டத்தில் கண்டபடியே அணுப்பிசகாமல் கட்டினால், திட்ட வெற்றியே கட்டட வெற்றியாய்விடும்.

தொடக்கத்தில் நன்கு கணிக்கப்பட்ட திட்டத்தை மேற் கொள்ளாதவரின் கட்டடவேலை உண்மையில் வீண் வேலை யாகவே முடியும். கட்டடத்தின் பகுதிகள் ஒன்றுடனொன்று பொருந்தாமல் கட்டும்போதோ, கட்டி முடிந்தவுடனோ, அதன் பின்னோ கட்டடம் நொறுங்கி விழுந்து விடும். நொறுங்காத நிலையிலும் எந்த நேரத்திலும் அதில் வாழ்பவருக்கு அச்சமும் கிலியும் இடையூறும் உண்டு பண்ணும், விரைந்து அழிவுக்கு உட்படும். திட்டம் இத்தகைய நிலையிலிருந்து கட்டடத்தை மட்டுமன்றி அதுபோன்ற எல்லாப் பெருவேலைகளையும் காக்கும்.

எந்த வேலைக்கும் உரிய சரியான முதல் தொடக்கம் அது பற்றி மனத்தில் அமையும் திட்டமே. இயற்கையான திட்ட