உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

17

மில்லாமல், ஒழுங்குமில்லாமல், எதையும் திறமையுடையவர் செய்வதுமில்லை, செய்ய விரும்புவதுமில்லை. ஒழுங்கு கேட்டையும் குளறுபடிகளையும் அதன் ஆற்றல் அழித்து விடுகிறது. ஒழுங்கு, வரையறை, நோக்கம் - இந்த மூன்றும் உடையவை எவை, அவை மட்டுமே எங்கும் எப்போதும் நீடித்து நிலைபெறுகின்றன. கணக்கியல் சார்ந்த இந்தப் பொதுத் திட்ட அமைதியைப் புறக்கணிப்பவர் மெய்மை, முழுமை, வெற்றி ஆகியவற்றிலிருந்து தம்மைத் தாமே அடைத்து வைத்துக் கொள்கிறார்.

'திட்டம் இல்லா வாழ்க்கை - முற்றும் தொடங்கிடும் போது அவப்போது - அது தொடர்ந்திடும் வாழ்வும் அவ்வாறே! படர்ந்திடும் அழிவு அதன் பண்பே! முற்ற முற்றத் துயர் அதன் விளைவு, முழுதுறழ் ஏக்கம் ஏமாற்றம் பலவே! மற்றது பாதி கழியுமுன் அதன்பளு வற்றிய வன்புதர்ச் சுமையாய் விடுமே!

அகத்தே திட்டமில்லாமல் ஒரு செயலில் இறங்குபவன் அச்செயலின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு வகையாக விட்டு விட்டு, பொருந்தா முயற்சிகளில் ஈடுபடுவான். இஃது இறுதியில் தோல்வியடைவது மட்டுமல்ல, இடையிடையேயும் எண்ணற்ற தொல்லைகள், சிக்கல்கள் உண்டு பண்ணி, முயற்சியாளரை டையறாக் கவலையில் ஆழ்த்தும். செயல் வீடு கட்டுவ தானாலும் தொழில் நடத்துவதானாலும், இந்த அடிப்படை மெய்ம்மை ஒரே மாறா மெய்ம்மையாகும். திட்டமும் வரை யறையும் உளத்திட்பத்திலிருந்து வினைத் திட்பத்துக்கும் வாழ்க்கைத் திட்பத்துக்கும் வழிவகுக்கும். செம்மை, ஒழுங்கு, முழுமை, வெற்றி, இன்பம் - இவை திட்ட வேரிலிருந்து தளிர்த் தெழுந்து மலரும் மலர்ச்சிகள் ஆகும்.

திட்டமே திட்பத்தின் மறைதிறவு

திட்டமே திட்பத்தின் மறைதிறவு - இஃது இயற்கையின் மாறாச் சட்டம். தொழில் முறை வேலைகளில் மட்டுமல்ல,