உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

அருட்பாக்களின் பேரின்பப் பண்

285

பேரின்பத்தின் உச்ச உயர்நிலை வாழ்வு முழுநிறை ஒழுங் கமைதி உடையது. அதே சமயம் அது சிக்கல்களற்றது. எளிமை வாய்ந்தது. ஆற்றலின் முழு அளவும் பயனுடைமையின் நிறை அளவும் அதில் வந்து ஒத்திணைகின்றன. ஆகவே பயனற்ற ஆற்றலும் இல்லை. ஆற்றல் கடந்த பயனும் இருக்க முடியாது. பயன் நாடிய ஆற்றல், ஆற்றல் நாடிய பயன் என இரண்டும் ஒன்றையொன்று தழுவியன ஆகின்றன.

பேரின்பத்தின் உச்சநிலை வாழ்வு முழுநிறை அமைதி உடையது. ஏனெனில் அமைதி நாடும் அவாக்கூட அவ்வமைதி யில் கிடையாது. அமைதியே இயல்பான பண்பாக நிலையாக நீடித்துவிடுவதால், அமைதி நாட்டம் என்ற ஒன்று இல்லாத தாகி, அமைதியின் அமைதி தவழ்கிறது.

அவாக்கள் வெல்லப்பட்டுவிட்டால், உள்ளம் செயலற்ற தாகி, உயிர்த் துடிப்பிழந்துவிடும் என்று சிலர் கூறுவதுண்டு. அது செயலின்மை, ஆற்றலழிவுதரும் என்றும் கருதுவதுண்டு. ஆனால் இவர்கள் உண்மையில் அவாக்களில் ஆழ்ந்து அமிழ்ந் துள்ளவர்களாதலினாலேயே அவ்வாறு கூறுகின்றனர். இது தவறு. அவா அழிவு செயலின்மையாவதில்லை. அது முன்னிலும் நிறைசெறிவுடைய செயலூக்கம் பெற்று இயங்குகிறது. அதில் ஆற்றல் அழிவு ஏற்படுவதில்லை. உண்மையில் மனிதர் கனவு காணாத அளவில் முழுநிறை ஆற்றலே அதில் செயற்படுகிறது. அது உயிர்த்துடிப்பிழந்து விடவில்லை. நேர்மாறாக அதன் உயிர்த்துடிப்பு தன் உயிரின் சிற்றெல்லை கடந்து, இன உயிரின் பேரெல்லை யெங்கும் அலைபாயும் பேரின்ப உயிர்த்துடிப் பாகிறது. அதனைப் போல உயிர்வளம், இன்பவளம், புகழ்வளம் பிறிதில்லை.

தனி மனிதர் இன்ப நாட்டம் கனவில்கூடச் சென்றெட்டாத ன்பம், சிற்றுயிர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அழியா உயிர்த்துடிப்பு, தனி உடைமை அவாவும் சிறு தற்பற்றாளரும் உணர முடியாதது பெரும்பேருடைமை, பொதுவுடைமை உணர்வு அந்நிலையில் தழைக்கின்றது.

இந்நிலைபற்றி அருட்பாக்கள் பண்பாடுகின்றன.