(286)
அப்பாத்துரையம் - 29
3
'இல்லைமுரணொலி, இல்லைபூசல், கலாம் அங்கே; மல்லல்தூரிகை வண்ணம், யாழிசை உண்டங்கே; செல்லல்நீங்கிய உள்ளம் வேய்ங்குழ லதுவாகச் சொல்லும் சொற்பொருள் தாண்டிய மோனச் சுவையங்கே! வீங்குவஅல்ல மடிமை, மிடிமை, துயர்வேட்கை ஏங்குவஅல்ல நாளும் வேளையும் பொருள்ஏதும் நீங்குவ தெண்ணி; நிறைநீள் காலம் விரைதரவே, ஒங்குவ துண்டே உள்ளத் துள்ளம் உவந்தங்கே! எண்ணுவ தெண்ணும் தனிநிலை யழிந்த உளமங்கே, கண்ணுறு மழகு கடந்த அழகு வெளியங்கே; கண்ணீ ரெல்லாம் பேரருள் ஒளியால் வானிடுவில் பண்ணா ரொளியின் வண்ணம தாகும் பரிசங்கே! னத்தாயக மீட்சி
தற்பற்றார்ந்த அவாக்களின் பிடியிலிருந்து ஒரு மனிதன் மீட்கப்பட்டபின், அவன் உள்ளத்தின் பாரம் குறைகிறது. அவன் அதன்பின் தனக்கெனவன்றி, மனித இனத்துக்கென உழைக்கும் ஆற்றல் பெறுகிறான். பசிவிடாய் நிறைவை நாடி மேன்மேலும் பசிவிடாய்களே பெருக்கிச் சுழன்றோடும் அவா வேட்டையின் வீண் முயற்சிக்குப் பதிலாக, இப்போது அவன் இருந்த இடத்தி லிருந்தே அமைதியுடன் புறப்பகைகளைக் கட்டிப் பிணைத்துள்ள அகப்பகைக் கயிறுகளைப் பிடித்தாட்டி, புன்முறுவலுடனும் உறுதியான வெற்றி நம்பிக்கையுடனும் போராடுகிறான்.
வெற்றி தோல்வி பற்றிய கவலை, ஏக்கம் இல்லாததனால், அவன் போராட்டம் களியாட்டமாக எளிதாகிறது. அதே சமயம் உயிர் இலக்குடன் கூடிய அப்போராட்டத்தில் அவன் அமைதி தன் முழு ஆற்றலையும் ஈடுபடுத்துகிறது.
வெற்றி நாடிய அவாப் போராட்டத்தில் வெற்றி தோல்வி கள் கவலையையும், வெற்றி தற்காலிகக் களிப்பையும், தோல்வி துன்பத்தையும் தந்தன. இப்போது கவலையற்ற நிலையில் அவன் வெற்றியிலும் தோல்வியிலும் ஒருங்கே களிக்கிறான்.ஏனென்றால் தோல்வியை வெற்றிக்கான பயிற்சியாக மட்டுமே இப்போது அவன் எண்ண முடியும். வெற்றி தோல்விக் கவலையில்லாததால்,