உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

19

போலவே ஒரு செயல் புறஉ புறஉலகில் தொடங்குமுன் அது முதலில் கருத்துருவில் - உள்ளத்தில் உருவாகிறது. செயலுருவில் அது குருத்து விடுமுன், காரணகாரிய வடிவில் அது திட்டமாக வேர்விடுகிறது. வேர்போல இங்கே கருத்து விதை கருத்தின் விதைத்தளம் கடந்து உள்ளத்தின் ஆழ்தட நோக்கிச் சென்று திட்டமிடுகிறது. இந்த ஆழ வேர்வளர்ச்சி ஓரளவு முழுமை யடைந்த பின்பே செயல் முளைக்குருத்துவிடத் தொடங்குகிறது. திட்டத்தால் வளம்பெறும் இந்தச் செயல் வளர்ச்சி தற்பண்பு என்னும் வளிமண்டலத்தினூடாகத் தற்குறிக்கோள் அல்லது ஊழ் என்னும் ஒளி மண்டலம் நோக்கி முன்னேறுகின்றது.

கருத்துத் தளத்திலும் கருத்தின் கருவாகிய அக உள்ளத்தின் காரணகாரியத் தொடர்புத் தளத்திலும் நல்லெண்ணமும் அன்பொளியும் நிரம்பியிருந்தால்தான் வினைக்களமாகிய புறத் தளத்தில் வெற்றி ஏற்படும். ஏனெனில் இவையே புற வளர்ச்சிக்குரிய அக உரக் கூறுகள். பகைமை, வெறுப்பு, பொறாமை, கீழ்த்தர அவாக்கள் ஆகிய மாசடைந்த எண்ணங்கள் அகத்தளத்தில் உலவினால், வினைக்களத்தின் விளைவுகள் வருத்தம் தருபவையாகவே இருக்கும். இவற்றுக்கு நேர்மாறான, இவற்றின் மாசகற்றும் எண்ணப் பண்புகள் அன்பு, மென்னயம், பரிவு, தன்னல மறுப்பு ஆகியவை. இத் தூய எண்ணங்களே சிந்தனைக் களத்துக்குச் சிறப்பளிக்கும் நற்றொடக்கங்கள். அவை ன்ப விளைவுகளுக்கு நம்மை ஏற்றிவிடும் ஏணிப் படிகள்.

இவை நேரடியான, வெளிப்படையான, எளிதில் காணத் தக்க உண்மைகள்; நடைமுறையில் முழுதும் நிறைபயன் தரத் தக்கவை. இருந்தபோதிலும் இவற்றை அறிந்து கொள்ளா ாதவர், அறிந்துகொள்ள முற்படாது புறக்கணிப்பவர், அறிந்துகொள்ள விரும்பாது விலகியகல்பவர் எத்தனைபேர்?

வாழ்க்கை, தோட்டம்: உள்ளம் விதைப்பண்ணை

விதைகளை எங்கே, எப்போது, எவ்வாறு விதைக்க வேண்டும் என்பதில் கருத்துச் செலுத்தும் தோட்டக்காரனுக்குத் தோட்டம் தன் முழுவளமும் தரும். இவை அவன் நற்றொடக் கங்கள் - இவற்றின் குறைபடா நிறை விளைவே அவனுள்ளத்தை முழுவதும் மகிழ்விக்க வல்லது. இதுபோல, தன் உள்ளத்தில்