உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20 ||

அப்பாத்துரையம் - 29

உறுதி வாய்ந்த, நலந்தரும், அன்பு எண்ணங்களை எவ்வாறு விதைப்பது என்று ஆராய்பவன் வாழ்வில் மிகச் சிறந்த பயனைப் பெறுவான். இன்பத்தின் மெய்வடிவையும் அதை அடையும் மெய்வழிகளையும் அவனே எளிதில் எய்துவான். நல்லனவாகிய தூய, மேலான பண்புகளை உள்ளத்தில் நீராக உலவவிடுபவனை நாடியே பேரளவில் எல்லையிலாப் பேரின்ப வெள்ளம் வந்து பாயும்.

நேர்மையான கருத்துக்களைப் பின்பற்றித் தொடர்வன நேர்மையான செயல்களன்றி வேறு எவையும் அல்ல. நேர்மை வாய்ந்த செயல்களைப் பின்பற்றித் தொடர்வது நேரிய வாழ்க்கையன்றி வேறெதுவுமன்று. நேரிய வாழ்க்கையோ பேரின்பத்தின் வாயில் கடந்து ஒருவனை இட்டுச் சென்றுவிட வல்லது. எனவே நேர்மையான சிந்தனைகளை மேற்கொள்க. அதன்பின், பேரின்பத்தை நீ தேட வேண்டாம். அது உன்னை நாடிவரும்.

உன் கருத்துக்களின் நன்மை தீமைக் கூறுகளில் ஆராய்ச்சியை உள்முகமாகச் செலுத்து. கருத்துக்களின் கெட்ட கூறுகளையும் கெட்ட கருத்துக்களையும் படிப்படியாக விலக்கு. அவற்றினிட மாக நல்ல கருத்துக்களையும் கருத்துக் கூறுகளையும் தேர்ந் தெடுத்து நிரப்பு. இவ்வாறு செய்வாயானால், உன் உள்ளும் புறம்பும் ஒவ்வோர் அணுத்துகளும் வெற்றி ஒளியில் மின்னி மினுங்கிச் சுடரிடும். அவற்றின் கனிந்த செவ்வொளி உன் பாதையில் வெற்றி நிலவொளி வீசும். உன் சூழல்களனைத்தையும் வெற்றிச் சூழல்களாக்கும்.

பொங்கும் நிறைவளம்

இந்தப் புறவெற்றி புறவெற்றியாகவே நின்றுவிடுவதன்று. அஃது உன் அகத்தை முன்னிலும் தூய்மைப்படுத்தி, மேலும் நேரிய நல்லெண்ணங்களை வளர்க்கும். உன் சமுதாயச் சூழலிலும் உன் துணைவரான ஆடவர் பெண்டிர், உறவினர், நண்பர் ஆகியவர் உள்ளங்களிலும் இது படிப்படியாக இதே வகை நல்லெண்ணங்களைப் பரப்பும். உன் பாதை மேன்மேலும் மலர்ப்பாதையாக, இன்பத்தினூடாகப் பேரின்பத்துக்கு, பேரின்பத்தினூடாகப் பெரும் பேரின்பத்து என்றும்