உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

25

முடியாத மாயப் பேரழகை, மாசு மறுவற்ற வண்ண வனப்பைக் காண்கிறான்; கண்டெய்துகிறான்.

பெருமை பெருமையன்று, சிறுமையின் ஆக்கமே பெருமை

உலகில் எல்லாப் பொருள்களுமே சிறு கூறுகளால் ஆக்கப்பட்டவை. அச்சின்னஞ் சிறு கூறுகளின் முழுவனப்பே பொருளின் வனப்புக்கு அடிப்படையாய் அமைகிறது. சிறு கூறுகளில் ஒன்று ஊறுபட்டாலும் மொத்த முழுமையின் அழகமைதி முற்றிலும் கெட்டுவிடும். எந்தச் சிறு கூறுகளாவது விடுபட்டுவிட்டால் மொத்த முதல் ஆக்கம் பெறாமலே போய்

விடும்.

மண்ணுலகம் சிறுசிறு துகள்களாலானது. சிறு துகள் இன்றேல், இம்மண்ணுலகம் இல்லையாகும். எனவே மண் ணுலகின் நேர்த்தியெல்லாம் இச் சிறு துகள்களின் நேர்த்தியே. சிறு கூறுகள்தானே என்று சிறு பொருள்களைப் புறக்கணிப் பவன் பெரும்பொருள்களில் அழகு காண முடியாது, அவலக் குளறுபடிகளையே காண முடியும்.

விண்மீனுக்கு எத்தனை சுடர்வண்ணம் உண்டோ அத்தனையையும் பனிமணியிலே காணலாம். கோளினங்களின் செவ்வொழுங்கினை நாம் அணுக்களிலும் காண இயலும். மனித உடலில் காணப்படும் அதே கணக்கியல் பிசகாத வியத்தக்க உறுப்பமைதியை நுண்ணுயிர்களும் மரங்களும் காட்டுகின்றன. இழைத்த கல்லை இசைத்தடுக்கியே எழிலார்ந்த சிற்ப வேலைப் பாடமைந்த கோயில்கள் கட்டப்படுகின்றன. இவ்வெல்லா நிலைகளிலும் சிறுபொருள் பெரும்பொருளுக்கு முன்னோடி யாகவே அமைகிறது. சிறுமை பெருமைக்குத் துணைக்கூறு மட்டுமன்று; பெருமையின் மூலத் தாயகமும் அதன் பண்புத் தலையூற்றும் அதுவேயாகும்.

பெருமையின் திசை பணிவு, பகட்டாரவாரமல்ல

பகட்டை விரும்பும் வெற்றாரவார மனிதர்கள் பெருமையை நாடுவது இயல்பு. எளிதில் பெரியவராகும் எண்ணத்தில் அவர்கள் பெருங்காரியங்களையே விழைவார்கள். சிறு