உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 29

செய்திகளைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பார்கள். இச்சிறு செய்திகளில் ஆரவாரப் புகழ் கிடையாது. ஆகவே, அவை அற்பக் காரியங்கள், பெரியவர்கள் கவனத்துக்கு உரியன அல்ல என்று அவர்கள் கருதுவர். ஆனால் இப்புறக்கணிப்பின் பயனாக, அவர்கள் பெருங்காரியங்கள் எதையுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் பெரியவர்கள் ஆதலும் அரிதிலும் அரிதாகிவிடுகிறது. இதுமட்டுமன்று; அவர்கள் பெருமையின் திசையிலேயே செல்வதில்லை.

பெருமையின் திசை பணிவு. அதன் பாதையிலுள்ள நாழிகைக் கற்களே பண்புகள். இவ்விரண்டும் எளிதில் பெருமை பெற்றுவிடக் கருதுபவர்களிடத்தில் ஒரு சிறிதும் இருக்க மாட்டாது.பணிவே மெய்யறிவின் தலையூற்றாதலால், அவர்கள் என்றும் மெய்யறிவு பெறமாட்டார்கள்.

பகட்டு விரும்புபவர் நாடும் பெருமை அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் தற்பெருமையுடன் நின்றுவிடும். அவர்கள் பெருமைப் பேச்சுப் பயனடைவதில்லை. பெருமையடைவ தில்லை. முடியாத கற்பனைக் காரியங்களைப் பற்றிப் பேசிப் பசப்பும் வெற்று வீம்புரையாகவே அஃது அமையும். இது காரணமாகச் சமுதாயத்தில் வெற்றுரை வீணருக்குரிய ஏளன மதிப்புமட்டுமே அவர்களுக்குக் கிட்டக்கூடும். உண்மையான மதிப்பு ஏற்பட முடியாது.

பெரியவர்கள் என்பவர்கள் யாவரும் உண்மையில் தன்னலம், தற்பெருமை துறந்து, பணிவுடன் சிறுசெய்திகளில் நுணுகிக் கருத்துச் செலுத்துபவர்களே யாவர். இன்றியமையாத வாழ்க்கைப் பொதுச் செய்திகள் ஆரவாரப் புகழோ பெருமையோ அளிக்கமாட்டா. அவற்றுக்காக எத்தகைய பரிசுகளும் வழங்கப்படுவதில்லை. இதையறிந்தும் அவர்கள் எளிமையுடனும் தன்னல மறுத்தும் அவற்றில் ஈடுபடுகின்றனர். ஆனால் இச்செயல்களுக்குப் புறப்புகழும் புறப்பரிசும்தான் இல்லை. அகப்புகழ், அகப்பரிசு உண்டு. அதுவே இன அறிவாகிய மெய்யறிவும், இன ஆற்றலாகிய உயிராற்றல் அல்லது ஆன்மிக ஆற்றலும் ஆகும்.

இங்ஙனம் பெருமை நாடாமலே பெரியார் பெருமையடை கின்றனர். ஏனெனில் அவர்கள் பெருமைக்குரிய பண்புகளை