உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

27

நாடினர். மெய்யார்வ உறுதி, தன்னலமறுத்த பொதுநலப்பாசம், தன்மதிப்பார்ந்த நடுநிலை கோடா நேர்மை, வாய்மை ஆகியவை அவர்களுக்கு அகத்தூண்டுதல் தந்தன. சிறு கடப்பாடுகளிலும் கடமைகளிலும் இப்பண்புகளின் பயிற்சி மேற்கொண்டு அவர்கள் இப்பண்புகளை வளர்த்தனர். அவையே பெருமைக் குரிய படிகளாதலால், அவர்கள் வேறு முயற்சியில்லாமலே பெருமையின் உயர்தளத்தில் ஏறி உலவும் வாய்ப்புப் பெறு கின்றனர்.

சிறு செய்திகள், தெய்வீக அமைதிக் கூறுகள்

கணங்களிலும் கணநேரச் சிறுசெயல்களிலும் உள்ளூரக் கருக்கொண்டுள்ள பாரிய ஆற்றலைப், பெருமைக்குரியவன், பெருமையின் திசையறிபவன் உணர்கிறான். சரியான சிறு சொற்கள், ஆளுக்கேற்ற வணக்க வழிபாடுகள், நேரத்துக்கேற்ற உணவு, உடை, எழுத்துப் போக்குவரவுகள், தேவைப்பட்ட அளவு ஓய்வு, உழைப்பு, சிறு முயற்சிகள், சிறுதிறத் தற்காலிகக் கடப்பாடுகள் - ஆயிரக்கணக்கில் இத்தகைய சிறு செய்திகள் வாழ்க்கையில் நாள்தோறும் வந்து குவிகின்றன. செயலை எதிர்நோக்கி நேரத்துக்கு நெருக்கடி விளைவிக்கின்றன. இத் தகையவற்றைச் சரிவரச் செய்ய அமைதி வேண்டும், பொறுமை வேண்டும். ஒரு சிறிது மன அலைவுடையவனுக்குக் கூட 'இவற்றைச் செய்வது அரிது, செயலுக்கான போதிய பயனும் அற்றது' என்று தோன்றும். 'செய்யாது விடுவது எளிது து, அதனால் பெருங்கேடு இல்லை' என்றும் அத்தகையவர் கருது வார்கள். ஆனால் செய்யாது ஒதுக்க ஒதுக்க, அவை பெருந் தொல்லைகளாக வளர்ந்து எங்கும் மனக்கசப்பையும் வெறுப்பை யும் பரப்பும். பெருமைக்குரியவன் இவற்றில் பெருங் காரியங் களுக்குரிய முழுநிறை கவனம் செலுத்தித் தன்னைச் சுற்றிலும் இனிமைச் சூழலை வளர்க்கிறான்.

இச்சிறு செய்திகள் இயற்கையாய் அமைவன, தெய்வீக அமைதிக் கூறுகள் என்று பெருமைக்குரிய பண்பாளன் எண்ணுகிறான். 'அவற்றைப் பேரின்பப் பாதையின் வளமாக்க வேறெதுவும் தேவையில்லை. தன்னலமோ, கோபதாபமோ, விருப்பு வெறுப்போ அற்ற அமைந்த சிந்தனையும் படபடப்