உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 29

பில்லாத பொறுமை வாய்ந்த செயலும் போதியவை' என்று அவன் உணர்கிறான். ஆகவே அவன் அவசரப்படுவதில்லை. எதையும் செய்யாது விடுவதில்லை. தவறு, மடமை என்றறிந்த வற்றைத் தவிர, எதையும் அவன் விலக்க முயல்வதில்லை. பின்னால் செய்வோம் என்று அவன் எந்தச் செயலையும் ஒத்திப் போடுவதில்லை. அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையைச் செய்து முடித்து விடுகிறான். செய்ய வேண்டாததைச் செய்து விட்டோமே என்றோ, செய்ய வேண்டுவதைச் செய்யாது விட்டோமே என்றோ என்றும் அவன் கழிவிரக்கம் கொள்வ தில்லை. ஏனெனில் இரு தவறுகளுக்கும் அவன் ஆளாவதே அரிது. ஆளானாலும், அத்தவற்றை மறுபடியும் செய்யாம லிருப்பதில் மட்டுமே அவன் கருத்துச் செலுத்துவான். சென்று விட்டது பற்றி வேறெவ்வகையிலும் எண்ண அவன் நேரமோ அறிவோ இடம் தர மாட்டாது.

எளிமையில் புதைந்துள்ள பேராற்றலே பெருமை

தொலைக் கடமைகளை அவன் தேடிக் காத்திருக்க மாட்டான். அருகிலுள்ள உடனடிக் கடமைகளைச் செய்து முடித்துக் கொண்டே போவான். அவற்றைச் செய்வதில் அவன் ன்பதுன்பங்களைப் பொருட்படுத்த மாட்டான். குழந்தை களின் கள்ளங்கபடமற்ற எளிமையுடன் அவன் செயலாற்று வான். ஆனால் அந்த எளிமையினுள்ளே அவனுமறியாத பேராற்றல் அடங்கியுள்ளது. எளிமையில் புதைந்துள்ள இப் பேராற்றலின் மறு பெயரே பெருமை.

சிறு செய்திகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தாத உலக முதல்வர் இல்லை. “அரசருடன் இருந்து உண்பவரைப் போல, உன் வீட்டிலும் இருந்து உண்பாயாக!” என்றார் அறிவர் கன்பூசியஸ். “செய்ய வேண்டுவது எதுவாயினும் அதை முழு ஊக்கத்துடன் திருந்தச் செய்க!” என்று மற்றொரு பேரருளாளர், புத்தர்பிரான் வகுத்துரைத்தார்.இவ்வாசகங்கள் சிறு செயல்களின் அளக்கலாகா ஆற்றலைச் சுட்டிக் காட்டுகின்றன. சிறு காரியங் களைச் சிறுகாரியங்களென்று கருதிப் புறக்கணிப்பதோ, அவற்றை அரைகுறை மனதுடன் விட்டதொன்று தொட்ட தொன்றாக ஒழுங்கின்றிச் செய்வதோ அறிவற்ற பெருவழு ஆகும்.