உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

39

எல்லை எதுவும் கூறாததன் காரணம் இதுவே. பேய் மகன் (கிறித்தவர், யூதரின் சைத்தான், இஸ்லாமியரின் இப்லிஸ், பார்சிகளின் அஃரிமான், புத்தரின் தேவலன்) என்ற கருத்தை உருவாக்கியவர்கள்கூட, கடவுட் பண்புக்கு எதிரான பண்பாக இக்கருத்தைக் குறித்தனரன்றி, அதனைக் கடவுளாற்றலுக்கு ணையான ஆற்றலாகக் குறிக்கவில்லை.

சிறுவினை மூலம் சிறுமையை ஆளக் கற்றுக்கொள்பவன் இவ்வாறு பெருவினையும் பெருமையும் ஆள்பவனாகிறான். அது மட்டுமன்று. அவனே உறுபெரும் பெருமை அல்லது தெய்வீக ஆற்றலையும் வளர்த்துக் கொள்பவன் ஆகிறான். சிறு வினைகளுக்கு அடிமைப்படுபவன் பெருவினைகளும் பெருமை யும் ஆள்வதில்லை. உறுபெரும் பெருமைக்கு அவனும் உரியவனே ஆயினும், அதனைத் தனதாகப் பெறுங் காலத்தை அவன் தானே மேலும் மேலும் நீட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறான். அவன் முழு அழிவை நோக்கியே செல்கிறான். முழு அழிவை அவன் உண்மையில் என்றும் அடையாவிட்டாலும் இந்நிலை அவன் தகுதியால் அமைவது அன்று. இயல்பான உலகின் நன்மை, அஃதாவது நல்உலகின் ஆகூழ் அவனை அவன் அற்பண்பின் முழுத் தகுதியையும் சென்றெட்டாமல் தடுக்கிறது. நம் உலகின் இந்த ஆகூழையே சமயவாணர் பொதுவாக இறையருள் என்றும், கிறித்தவர் சிறப்பாக இயேசுவின் தனியருள் என்றும் தனிப்பட விளக்க முற்பட்டுள்ளனர். ஊழுக்கு அப்பாற் பட்ட இறைவன் ஊழைப் பொதுவாகத் தகுதி அடிப்படையில், நேர்மை என்ற குறி நின்று இயக்கினும், நல்லூழை அதன் தகுதிக்கு மேற்பட நல்திறத்தின் பக்கமாகச் சாய்த்தும், போகூழை அதன் தகுதியில் குறைத்து, தீத்திறத்தின் எதிர்பக்கமாகச் சாய்த்துமே யக்குகிறான் என்று கூறலாம். கடவுட் பண்பை நுணுகி நோக்கிய அருளாளர் ஊழ்கடந்த அருளுருவாகக் கடவுளைக் குறிப்பதன் உட்பொருள் இதுவேயாகும்.

ஆகூழ், போகூழ்

வாழ்க்கையை ஒரு பெரிய கூட்டுறவு அமைப்பு, கூட்டுறவாக அமைந்த ஒரு பெரும் பொறுப்பகம் என்று வருணிக்கலாம். அதில் கூட்டுறவின் தன்மை அதன் ஒவ்வொரு தனியுறுப்பின் தன்மையையும் பொறுத்தது. ஆனால் ஒவ்வோர் தனி உறுப்பின்