உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 29

வளர்ச்சியும் இந்தக் கூட்டுறவின் வளர்ச்சியையே சார்ந்தது. தனி மனிதன் வளர்ச்சி தனி மனிதன் தன்மை கடந்தும், கூட்டுறவின் வளர்ச்சி கூட்டுறவின் தன்மை கடந்தும் செயலாற்றுவது காணலாம். இந்த நல்ல மாறுபாடு, கூட்டுறவு அமைப்பவர் அதன்மீது சுமத்தும் பொறுப்பாண்மை, ஒத்துழைப்புக் குறிக்கோளின் பயனேயாகும். வாழ்க்கையிலுள்ள இயல்பான தெய்வீகப் பண்பு இதுவே. அஃது அழிவுப் போட்டி கடந்த இனப்பற்றாக, உயிர்ப்பாசமாக, அன்பாகச் செயலாற்றுகிறது.

ஒவ்வொரு சிறுவினையிலும் முழுக்கருத்துச் செலுத்து பவன் முதலில் அவ்வினை கடந்து தன் தனிவாழ்வில் ஆற்றல் பெருக்குகிறான். ஆனால் மனித வாழ்வாகிய இயற்கைக் கூட்டுறவில் அது தனிவாழ்வின் ஆற்றலாக நின்று விடுவதில்லை. அதுவே பரந்து சமுதாய ஆற்றலாக, இன ஆற்றலாக வளமுறு கிறது. சிறுவினை ஊக்கத்தின், முயற்சியின் முழுவிரிவாற்றல் தொடங்குமிடம் இதுவே. இது முயற்சியுடையவனை மட்டு மன்றி அவன் இனத்தையும் வளர்க்கிறது. முயற்சியற்றவன் தனிவளத்தை முயற்சியின்மை கெடுக்கும்போது, அவன் முழு அறிவு பெறாததன் இரகசியம் இதுவே.

"நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம், அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.’

99

என்ற அறவுரைகளின் மெய்ப்பொருள் இதுவே. முயற்சி யுடையவன் வாழும் னத்தில் முயற்சியுடையவன் முயற்சி அம்முயற்சி மேற்பட பயன் தருகின்ற சமுதாய, இன ஆகூாழாகிறது. முயற்சியற்றவன் மடிமைகூட அவன் வளத்தை ஓரளவே கெடுக்கிறது. ஆயினும் முயற்சியற்றவர் பெருகினால், அந்நிலை தனி மனிதனை அழிக்காமல், அத்தகையவர்களை ஈன்ற னத்தையே அழிக்கும் போகூழ், அழிவூழ் ஆகிவிடும்.

இன ஆகூழ், போகூழ்

நன்மை செய்தவர் பலர் கேடடைவதையும், தீயன செய்தவர் பலர் வாழ்வதையும் கண்டு, கடவுட் பண்பில் நம்பிக்கை யிழந்தோ, நம்பிக்கை தளர்ந்தோ மறுகி மயங்குபவர் உண்டு.