உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

41

முயற்சி, முயற்சிக் கேடு ஆகியவற்றின் தனி உறுப்புக் கடந்த ஆகூழ், போகூழ்ப் பண்புகளை உற்று நோக்கினால், இங்ஙனம் மறுகத் தேவையில்லை. நல்லுறுப்புக்கள் புறத்தோற்றத்தில் அழிவதாகத் தோற்றுதல், இனவளர்ச்சியாக அவை மாறுபடும் மாற்றமே. தீயுறுப்புக்கள் தழைப்பதாகத் தோன்றுவதும் தற்காலிகமானதே சில சமயம் அது தனி மனிதன் வாழ்வு முழுவதும் தழைக்க வைத்து விடவும் கூடும். ஆனால் அதன் முழு அழிவாற்றலுக்கும் அத்தனி மனிதன் இனம் ஆளாக நேரும்.

-

பண்டை உலகின் பேரினங்களான எகிப்தியர், சால்டியர், கிரேக்கர், உரோமர் ஆகியோரின் அழிவு இதற்குச் சான்று பகரும். நல்லோர் பலர் அவ்வினங்களுக்காக வாழ்ந்து அவற்றை வளப்படுத்தியிருந்தனர். அவை பண்டைப் பேரினங்களான வகை இதுவே. ஆனால் இனத்துக்காக வாழ்ந்தவர் கேடுற்றழிந்தனர். இனத்தைத் தன்னலத்துக்குப் பயன்படுத்தி விற்று வாழ்ந்தனர் பல்லோர். அதன் பயனாகவே மின்னல்போல் பேரொளி வீசிய அவ்வினங்கள், மின்னல் போலவே விரைவில் அழிவுற்றன.

தமிழகம் தாழ்வுற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நலிவுறுவதற்கும் இதுவே காரணம். இனத்துக்காகப் பாடு பட்டவர், பாடுபடுபவர் அழிந்து கொண்டேவர, இனத்தைக் காட்டிக் கொடுப்பவரே வாழ்ந்துவரும் நிலையைத் தமிழக வாழ்விலும் வரலாற்றிலும் நெடுகக் காணலாம். ஆயினும், இவ்வினத்தில் இனத்துக்காக அழிபவர் பேரெண்ணிக்கையே இன அழிவைத் தடுத்து இன்னும் இனத்தாழ்வு மட்டும், இ அவல நிலை மட்டும் நிலவும்படி செய்கிறது. மாண்ட இனங் களுடன் மாளாமல், வாழும் இனங்களுடனேயும் வாழாமல், அஃது ஊசலாடிக் கொண்டிருப்பதன் முழு விளக்கம் இதுவே.

இனம் மட்டுமல்ல, தொழில்நிலையம், இயந்திரம், அழகும் வீறும் ஒருங்கே கொண்ட திருக்கோயில், இன்னலமுடையவர் வாழ்க்கை - இத்தனையும் இனத்தைப் போலவே கூட்டுறவின் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புக்களேயாகும். இவை ஒவ் வொன்றிலும் உறுப்புக்களின் தனி வாழ்வுமட்டுமன்றி அவற்றின் இணைவிசைவும் மொத்தத்தின் வாழ்வாக அமைகிறது. மொத்த முழுமுதலின் வாழ்வே உறுப்பின் தனி வாழ்வுக்குரிய அடிப் படையாகவும் திகழ்கின்றது.