உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 29

42

தீமையின் அளவுகடந்த அழிவாற்றல்

சிறுபழிகள், சிறுகுற்றங்கள், தீமையின் பக்கமாகச் சாயும் சின்னஞ்சிறு சலுகைகள், இளக்காரங்கள் ஆகியவை சிறு சறுக்கல்கள்தான் என்று நினைப்பவன் அறிவற்றவன். பெரு வாழ்வில் பெருந்தீங்கு நேராதவரை, இச்சிறுவழுக்கள் அவ் வளவாக வெளிப்படையான பலன் தரமாட்டா என்று கருது வதும் மூடத்தனம் ஆகும். அத்துடன் பொதுவாக நற்செயல், நற்பண்புகள், உடைய வாழ்வில், பெரும்பான்மையான நற் பண்புகள், நற்செயல்களிடையே இச்சிறு வழுக்கள் பெருநலங் களில் புதையுண்டு மறைந்துவிடும் என்று பலர் எண்ணுவது இயல்பு. ஆனால் நன்மை தீமைக் கலப்பில் தீமையின் ஆற்றல் பெரிது; அது தீமையின் அளவைப் பொறுத்ததல்ல என்பதை இத்தகையோர் கவனிப்பதில்லை.

ஒரு குடம் வேப்பெண்ணெயை மணப்படுத்த ஒரு துளி நெய்யும் போதாது. ஒரு குடம் நெய்கூடப் போதாது. ஆனால் ஒரு குடம் நெய்யைக் கெடுக்க ஒரு துளி வேப்பெண்ணெய் போதும். ஒரு பானை நஞ்சில் ஒரு துளியோ, பல துளியோ அமுதம் கலப்பதால் நஞ்சு அமுதமாய் விடாது. ஆனால் ஒரு பானை அமுதில் ஒரு துளி நஞ்சு போதும், அத்தனையையும் அது நஞ்சாக்கிவிடும்!

நன்மையைப் பேணிவளர்க்கும் செயலைவிடத் தீமையைத் தடுத்துக் காக்கும் செயலே நன்மை பேணுபவருக்கு முக்கிய மானது. நன்மையின் குறைவு தீமையாய்விடாது. ஆனால் தீமை நன்மையையே அழித்துவிடும். ஆகவே நன்மையைப் பெருக்கும் முயற்சியைவிட, சிறிதளவு தீமையைக்கூட அணுக விடாமல் காப்பதே அறிவுடைய செயலாகும். சிறிதளவு தீமை பெரு முயற்சியால் ஈட்டித் திரட்டப்பட்ட பெரு நன்மையாகிய உன் செல்வத்தை ஒரு கணத்தில் இல்லாதாக்கிவிடும். ஏனெனில் நன்மை என்பது ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாகச் சிறுகச் சிறுகச் சேர்த்துத் திரட்டும் தேன் போன்றது. தீமை என்பது ஒருவன் கண்பட்டு அது ஒரு கணத்தில் அழிவது போன்றது.

அறிவிற் சிறந்த அறிஞரிடையே ஒரு சிறு அறியாமை காணப்பட்டால், முற்றுத்துறந்த முனிவரிடையே ஒரு சிறு ஒழுக்கக் கேடு காணப்பட்டால், மக்கள் அவ்வறிஞரை, அம்