உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 29

நேர்மையான, நேர்வழி செல்லும் வாழ்க்கையால், வாழ்வின் அறிவு பெருகுகிறது. அது இன்னல்களைக் குறைக்கிறது. இடர்கள் படிப்படியாகக் கரைந்து மறைய வைக்கிறது. கதிரவன்முன் பனிக்கணங்கள்போல அவை மாய்ந்து மடிகின்றன.

கடுமையும் மலைப்பும் காண்பவன் காட்சியே!

இடர்கள் சூழலின் சுற்றுச் சார்புகளிலிருந்து எழுவன போலத் தோற்றுகின்றன. இது இயல்பு. ஆனால் முதற்கண் அவை எழுவது சூழலிலோ சுற்றுச் சார்பிலோ அல்ல. அச்சூழல்கள், சுற்றுச் சார்புகள் வகையில் நீ கொள்ளும் கருத்தும், அச்சுற்றுச் சார்புகளுக்கெதிராக உன் உள்ளம் மேற்கொள்ளும் நிலையுமே உன் இடர்களுக்கு அடிப்படை ஆகும். இதனை நீயே சிந்தித்துப் பார்த்து எளிதில் காணலாம்.

ஒரு குழந்தைக்குக் கடத்தற்கரிய கடுமையுடையதாகத் தோற்றும் செய்தி அனுபவமுதிர்ந்த மனிதனுக்கு இடராகவோ கடுமையுடையதாகவோ தோற்றுவதில்லை. அதுபோலவே அறிவற்ற மூடனுக்கு மலைப்பைத் தருவதாகத் தோற்றும் ஒரு நிகழ்ச்சி அறிவுடையவனுக்கு எத்தகைய மலைப்பையும் தருவ தில்லை.

கடுமையும் மலைப்பும் காண்பவன் உள்ளத்திலன்றிக் காட்சிப் பொருளில் இல்லை என்பதை இவ்விளக்கங்கள் தெள்ளத் தெளியக்காட்டும். மலைப்பு மனம் சார்ந்தது. கடுமை யும் அதுவே. இரண்டும் புறப்பண்புகள் அல்ல, அகப்பண்புகளே.

எழுத்துக்களின் உருவங்கள், எண்களின் இயல்புகள் ஆகியவை பயிற்சிபெற்ற மனிதனுக்கு எவ்வளவு சிறிய, எளிய, அடிப்படை அறிவுக் கூறுகள் என்று கூறத் தேவையில்லை. ஆனால் அதுவே கல்லாதவனுக்குக் கற்பாறையாகவும், முதிராக் குழந்தை உள்ளத்துக்குக் கடத்தற்கரிய பெருமலையாகவும் தோற்றுகின்றன. எழுத்துக்கள் பயில, எண்மானம் கைவரக் குழந்தை எத்தனை நாழிகை, நாள், வாரம், மாதம் - சில சமயம் ஆண்டுகள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது! எத்தனை குழந்தைகள் ‘முடியாதன’ என்று கருதி அப்பாறையில் முட்டி