உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

53

அழுகண்ணீரில் மிதந்திருக்கின்றன! ஆனால் கைவந்தபின் அவை எவ்வளவு சிறுசெயல்களாகப் போய்விடுகின்றன!

இவற்றை எளியன என்று கருதும் பெரும்புலவன்கூட பிள்ளையின் பெருமுயற்சி கண்டு சீற்றமோ பொறுதியிழப்போ கொள்ளும் பெற்றோரும்கூட, குழந்தைப் பருவத்தில் அக்கடுமை கடந்தேயன்றோ அதை எளிதென்று கருதத் தொடங்கி யுள்ளனர்? கடுமை குழந்தையின் முதிரா அறியாமை உள்ளத் திலும், எளிமை பயிற்சி மூலம் அது கடந்து வளர்ந்துவிட்ட முதிர்ந்த அறிவிலும்தான் இருக்கின்றன என்பதில் எவருக்கும் ஐயமிருக்க முடியாது.

கல்வியின் தொடக்கத்துக்குரிய இக்கடுமை எளிமைத் தொடர்பே வாழ்க்கையின் எல்லாக் காரியங்களுக்கும் பொருந்தும். கருத்தில் தோன்றிய கருமத்தின் கடுமையே நாளடைவில் காரிய நிறைவேற்றமானபின் கருத்தில் எளிமை யாகத் தோற்றுகின்றது.

எளிமை என்பது மனம் படிப்படியாக அடைந்த கடும் பயிற்சியின் விளைவன்றி வேறன்று. அறிவு என்பதும் இக் கடுமை கடந்த எளிமை ஒளியே.

குழந்தையின் வருங்கால நலனுக்கு, மனித குலத்தின் வளர்ச்சிக்கு இத்தொடக்கக் கடுமை இன்றியமையாத ஒரு படி ஆகும்.

படிகளே!

கடுமை, டர் – எளிமையின் படிக

எளிமையின் தொடக்கம் கடுமையே. எளிமையின் படிகளும் கடுமைகளே. கடுமையை மாற்றும் கருவியே மலைப்பு, இடர், ன்னல் ஒவ்வொரு கடுமையையும் ஒரு கடுமுடிச்சாகக் கடந்தே எளிமை என்னும் நேரிழை வழியாக வாழ்க்கை முன்னேறி வளம்பெற முடியும். கடுமுடிச்சுக்களைத் தாண்டும் முயற்சி மலைப்பு; அவற்றைப் புரியறிந்தவிழ்க்கும் முயற்சியே இடர்; அவற்றையே காலூன்றும் படியாகக் கொண்டு மேலேறிச் செல்லுதல் இன்னல். இவ்வாறு கடுமையின் பயிற்சி எளிமையின் பாதையை மேன்மேலும் எளிதாக்குகின்றது. ஏனெனில் ஒவ்வொரு இன்னலும் கடந்தபின் ஆற்றல் பெருக்கமுறுகிறது. அறிவு விரிவுறுகிறது. தன்னம்பிக்கையும் தற்பற்றும் குறைகின்றன.