உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாயுள்ளம்

1749 மார்ச் மாதம் இளவேனிற் காலத்தின் மாலை இளந்தென்றல் மாரிக்காலக் குளிருடன் கலந்து அறைக்குள்ளும் வந்து சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மாது ழீன் பெரோன் தன்

ரண்டாவது பெண் மகவு லாரைனைப் பெற்றெடுத்த பின் சோர்ந்து கிடந்தாள். அரையுணர்வுடன் தனியே கிடந்த அம்மாது அடிக்கடி நோவு பொறுக்காமல் புரண்டு துடித்துக்கொண்டிருந் தாள்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் அவளுடைய முதல் பெண்மகவு பிறந்தது. அதுவும் ஓர் அழகு மணியாய்த்தான் இருந்தது. அதன் பெயர் லீமா. ஆனால், அதன் நினைவே தாயின் நெஞ்சைப் பிளக்கத் தக்கதாயிருந்தது. ஏனெனில், அது மூளை வளர்ச்சி தடைப்பட்டு அறிவு மந்தமுடைய பிள்ளையாயிருந்தது. இப்போது இவ்விரண்டாவது குழந்தையோ முதலதை விட எத்தனையோ மடங்கு அழகுடையதாய்த்தான் திகழ்ந்தது. அதன் உடல் மாவால் பிசைந்து குழைத்து, வெளியே தந்தத் தகடு போர்த்து, அதன் மீது பொன் முலாம் பூசியதுபோலப் பொலிந்தது. அதன் கண்கள் வானின் நீல நிறத்தையும் கடலின் நீலத்தையும் தோற்கடிப்பவையாயிருந்தன. தாயின் கவலை கலந்த அன்பு அந் நீலநிற விழிகளைக் கூர்ந்து நோக்கி, அதில் முந்திய குழந்தையின் அறிவு மந்தந்தான் உள்ளே நின்று ஏய்க்கிறதா, அல்லது அறிவொளியின் ஊற்றுப் படர்கிறதா என்று பார்த்து முடியுமுன், பணிப்பெண்டிர் வந்து குழந்தையை எடுத்து அதற்காக அமர்த்தப் பெற்ற பாலூட்டும் செவிலியிடம் ஒப்படைத்து விட்டனர்.

தனிமை, தன்னந்தனிமை! பெற்ற குழந்தையின் துணை கூட இல்லாமல் தாய் தனியே கிடந்தாள். வெளியறையிலிருந்தபடியே அவள் கணவன் சார்லஸ் பெரோன், "என்ன! இதுவும்