உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அப்பாத்துரையம் - 30

பெண்தானா? சீச்சீ, என்ன வாழ்வு இது?” என்ற கூறிவிட்டு அவள் செவிகளில்கூடப் படும்படியாகக் கால் தூசியைத் தட்டித் துடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டதை அவள் மறந்துவிடவில்லை. குழந்தையைப் பார்க்க, தாயின் நிலைபற்றிக் கேட்டறியக்கூட அவன் உட்புறம் எட்டிப்பார்க்கவில்லை. அந்தோ! என்ன அன்பற்ற வாழ்வு! என்ன துணையற்ற நிலை!

"என் தனிமை கொடிது. என் குழந்தையை இன்னும் இங்கே சிறிது நேரம் இருக்கவிட்டிருக்கக்கூடாதா? இதைப் பார்க்கக்கூட என்னால் எழுந்து அமர முடியாதுதான். அதன் உடல் என்மீது படுவதையாவது எண்ணி ஆறுதல் பெற்றிருப்பேன். என் கணவர் அதனைப் பார்த்து ஏதாவது பேசியிருந்தால்கூட எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். யாருக்கும் என்னைப் பற்றிக் கவலை கிடையாது. என் கணவனுக்குக் கொ......!” அவள் உள்ளம் இத்தகைய ஏக்கங்களிடையே உள்ளூர உடைவுற்றது.

வரவு

வெளியே புயலும் காற்றும் வீசியடித்தது. வேனிற் காலத்தின் கண்டு அஞ்சியோடும் பனிப்புயலின் கடைசி மூச்சு மடக்குக் கதவுகளையும் பலகணிகளையும் ஆங்காரத்துடன் தடதட வென்று தட்டித் தகர்த்துக்கொண்டு சுழன்றடித்தது.இயற்கையின் இவ்வரவம் தவிர எங்கும் எவ்வகை ஓசையும் இல்லை.

மஞ்சத்தின் மெத்தைகளும் திண்டுகளும் வில்வெட்டுப் பட்டினால் தைத்தவை; அன்னத்தின் மெல்லிய தூவிகளும் இலவம் பஞ்சும் அவற்றினுள் மெல்ல அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உறைகளின்மீது அழகிய பூவேலை ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. மேற்கட்டிகள் வானின் நீல நிறத்துடன் போட்டி யிட்டன. திரைகளோ செங்கழுநீர் மலரின் வண்ணமாயிருந்தன. மஞ்சத்தின் கால்களும் தூண்களும் வெண் பித்தளைகளாலமைந்து, வெள்ளி பொன் இழைப்பு வேலைகளுடன் தகதகவென்று மின்னின. தலைப்பின் அருகிலும் நான்கு மூலைகளிலும் அரேபியப் பாலைவனத்திலிருந்து கொண்டுவரப் பெற்ற தீப்பறவைகளின் நீண்ட இறகுகள் செப்பமுறச் சூட்டப் பட்டிருந்தன. காற்றில் அவையாவும் அசைந்து மாது ழீனின் துயருக்காகப் படபடப்பவைபோல் துடிதுடித்தன.