உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

5

ஆம்! மாது பெரோன் செல்வ உயர்குடியிற் பிறந்து, உயர்குடி யில் வாழ்க்கை புகுந்த நங்கைதான். அவள் ஆடையணிமணிகளும் அதற்கேற்ற பொற்பும் பொலிவும் உடையவையாகவே இருந்தன. ஆனால்,புறத்தே உள்ள இந்தப் பொற்பையும் பொலிவையும் அப்பேதை அனுபவித்தறிந்ததே கிடையாது. அவள் வாழ்க்கை அவ்வளவு துன்பமயாய் இருந்தது.ஃபிரான்சு நாட்டின் முதலதரச செல்வக்குடியில்கூட, மாமியார் நாத்தனார் கொடுமைகள் ஒரு கொடுமைகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எந்த அளவுக்கு நரகமாக்க முடியும் என்பதை மாது மீன் பெரோனின் வாழ்க்கை எடுத்துக்காட்டிற்று.

தன் தாய், தங்கை, தமக்கையருக்காகவே அவளை மணந்து கொண்டவன்போல் அவள் கணவன் அவளிடம் நடந்து கொண்டான். அவன் மற்றவர்களுடன் வாய்விட்டுப் பேசுவதை யும், உளம்விட்டுச் சிரிப்பதையும்தான் அவள் செவியாரக் கேட்டிருந்தாள். அவளிடம் அவன் சீற்றமும் எரிச்சலும் கடுகடுப்பான் முகமும் தான் எப்போதும் காட்சியளித்திருந்தன. அவளுக்கு இருட்டில் மட்டும்தான் அவன் கணவனாயிருந்தான். பகலொளியிலெல்லாம் மாமியார், நாத்தனார் கொடுமையே அவள் வாழ்வின் கணவனாய் நின்று கூத்தாடியது. அவள் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தது ஒன்றுதான் குடும்ப வாழ்வில் அவள் ஈடுபட்டவள் என்பதற்குரிய சின்னமாயிருந்தது.

மனைவியின் உரிமைதான் அவளுக்கு இல்லை என்றால் தாயின் உரிமையாவது உண்டா? அதுவும் அவளுக்கு மறுக்கப் பட்டது. முதற் குழந்தை லீமாவின் பிள்ளைப் பேற்றில் நோவுக் கிடையில் அவள் அயர்ந்து கண்மூடிக் கிடந்தாள். பிள்ளை பிறந்ததும் அவருக்குத் தெரியாது. அதன் அழுகையையும் அவள் கேட்கவில்லை. கண்விழித்துப் பார்த்தபோது வயிற்றில் பாரம் குறைந்திருந்தது.ஆனால், பிள்ளையைத் தேடியதாயின் கண்களில் ஏமாற்றமே காணப்பட்டது.செவிலியர் அதனை அப்புறப்படுத்தி யிருந்தனர். பிள்ளை பிறந்து உயிருடனிருக்கிறது என்பதையும், அது பெண் என்பதையும், அது அழகுடையது என்பதையும் யார் யாரோ, யார் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை உற்றுக் கேட்டுத்தான் அவள் ஊகித்துணர வேண்டியிருந்தது.