உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அப்பாத்துரையம் - 30

உள்ளத்தோடு உள்ளந் தடவி மகிழ, உரையாட, அக் குடும்பத்தில் அவளுக்கு யாருமில்லை. அத்துடன் தாயன்பு படாத காரணத்தினாலோ, தாயின் துன்பம் கருவிலேயே பிள்ளையின் மூளைமீது சென்று அழுத்தியதனாலோ, அதன் மூளை வளர்ச்சி தடைப்பட்டுப் போயிற்று. உடல் வனப்பு வளர்ந்தது. ஆனால், அறிவின் செவ்வொளி படராமல், அது நிறம் விளறி வாடி வதங்கிய மென்மலர் போன்றிருந்தது.பகலொளியிற்பட்டு மங்கிய வெண்மதிபோல் அதன் அழகு தேய்வுற்றது. அறிவு மந்தமுற்றுத் தெம்மாடிக் குழந்தையென அது தூற்றப்பட்டது. தாயுள்ளம் தனைக் கண்டும் கேட்டும் உள்ளூரத் துடியாய்த் துடித்தது. ஆனால், அவள் பிள்ளை அந்நிலையிலும் அவள் அரவணைப் பின்றி, அவள் ஆறுதலின்றி, அயலாரின் புறக்கணிப்புக் களிடையிலும், இடிப்புரைகளிடையிலும் கேலி நகையாடல்களி னிடையிலும் தரங்கெட்டு உரங்கெட்டு, அருமையற்று வளர்ந்தது.

இப்போது இரண்டாவது பிள்ளைப்பேற்றின் துன்பம் அவள் அரை யுயிரையும் குறையுயிராக்கி விட்டது. இனி, அவள் வாழ்வு நாட்கணக்கிலிராது; மணிக்கணக்கிலேயே இருக்க முடியும் என்பதை அவள் அறிந்தாள். இந்த நிலையிலும் அவளுக்கு யாரும் துணையில்லை. தன் குழந்தையைக்கூட இறுதியாக அவள் பார்க்க முடியவில்லை. "இந்தத் தடவை குழந்தை எப்படியிருக்குமோ-இதுவும் அறிவு மந்தமுடையதாய் அமையுமோ, என்னவோ" என்ற நினைவு தாயின் அரையுணர்வு நிலையிலும் அவள் உள்ளத்தை அரித்தது.

66

வாழ்வு அவளுக்கு வேம்பாய்க் கசந்துவிட்டது. சாவை அவள் மனமார வரவேற்க என்றைக்கும் தயங்கியதில்லை. ஆனால், இப்போது அவள் இறக்க விரும்பவில்லை; இறந்து டுவோமோ என்று கலங்கினாள். ஏன் இந்த மாறுதல்? கடவுளே! நான் இறக்க விரும்பியவள்தான். ஆனால், இப்போது நான் இறக்கக் கூடாது. நான் இறந்தால் என் குழந்தையை - என் குழந்தைகளை யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்? யார் எண்ணி எண்ணி ஏங்கவாவது செய்வார்கள்?” என்று அவள் விம்மி வெதும்பினாள். புயலின் தொலையாரவாரமும் அவள் உள்ளக்குமுறலின் எதிரொலிகள் போலவே "யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்? யார் நேசிப்பார்கள், யார் பார்ப்பார்கள்?” என்று கூடக்கூட ஆர்ப்பரித்தது.