உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

33

அவள் கணவனே அப்பெருஞ் செல்வத்துக்குரியவன். அதனை ஆள்பவன் அவள் கணவனாகவே இருப்பான். இச்செல்வத்தைக் குறியாகக் கொண்டு எவரேனும் அவளை மணந்தால், அவளை ஏமாற்றிச் செல்வத்தைப் பறித்துக்கொண்டு, அவளைப் பின்னும் துணையற்றவளாக்கலாம்; அல்லது அப்பணத்தை வைத்துக் கொண்டே கொடுமைப்படுத்தலாம். ஆகவே, தான் கவலைப்பட வேண்டியது தன்னைப் பற்றியன்று, அவளைப் பற்றியே என்று லாரைன் முடிவு செய்துகொண்டாள்.

அவன் அஞ்சியது முற்றிலும் சரியாய்ப் போய்விட்டது. மாது சூசேன் பெரோனின் தொலையுறவினனான ஏவ்ரிமாண்டு என்ற ஒரு பகடி திரு. பெரோனின் மனத்தைக் கரைத்து அவர் இணக்கம் பெற்று லீமாவிடம் காதல் பேச்சுப் பேசத் தொடங் கினான். உலகமறியாத லீமா அவனை மனமார நம்பி அடிக் கடி தங்கையின் பாதுகாப்பின்றி அவனுடன் போகவரத் தொடங்கினாள்.

ஃபிரெஞ்சு நாட்டார் வழக்கப்படி காதலுரிமை பெற்றபின் காதலர் தொடர்பில் யாரும் தலையிட முடியாது. அண்ணன் தங்கைகூட அவர்களைத் தொலைவிலிருந்தே கவனிக்க முடியும். ஆகவே, லாரைன் இன்னது செய்வதென்றறியாமல் மனங் குழம்பினாள்.

லாரைன் கவலையை விரைவிலேயே காலதேவன்போக்கினான். எப்போதுமே நலிவுற்றிருந்த லீமா தன் புதிய மாறுபட்ட உணர்ச்சி தாங்காமல் மடிவுற்றாள். தமக்கையின் துணையுமற்ற லாரைன் பாகாயுருகினாள். ஆனால், அத் துன்பத்திடையேகூட, தமக்கை அச்சமயம் இறந்ததால் உண்மையில் சாவினும் கொடிய ஒரு பாழ்ங் கசத்திலிருந்து தப்பினாள் என்று நினைக்காமலிருக்க முடியவில்லை. அப்பாழ்ங் கசம் எத்தகையது என்பதையும் அவள் அறிய நெடுநாட் செல்லவில்லை.

தமக்கையின் இறுதி வினைகள் ஆற்றி ஒன்றிரண்டு நாட்களே ஆயின. லாரைன் இன்னும் கறுப்பாடையுடனேயே இருந்தாள். அச்சமயம் லீமாவை மணஞ்செய்ய இருந்தநயவஞ்சகன் எவ்ரிமாண்டு அவளைக் காணவந்தான். துயர் வினாவும் சமய மாதலால் அவளும் அவனுடன் உரையாட மறுக்கவில்லை. “அம்மணி! தங்கள் பெருந்துயரில் பங்கு கொண்டு ஆறுதல் தரும்