உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

||– –

அப்பாத்துரையம் - 30

குடும்ப குரு அவள் துயர் கண்டு சிறிது கண்கலங்கினார். ஆனால், அவர் வெறும் சமயகுரு மட்டுமல்ல. உலகியலறிவும் நிரம்பியவர். ஆகவே சிறிது நேரம் அவள் உணர்ச்சிகள் தெளியும் வரை அவர் வாளா இருந்து விட்டுப் பின் அறிவுரை கூறினார்: "அம்மணி! நீ ஆண்டில் இளமையுடையவன். உலக அனுபவம் பெறாதவள்; துணையற்றவள் என்று நீ கருதுவது அதனாலேயே. ஆனால், நீ அறிவுடைய பெண். தம் அறிவுக்கு மிஞ்சிய துணை உலகில்” யாருக்குமே கிடையாது. அதை நீ பயன்படுத்த வேண்டும். நீ இன்று துணையற்றிருப்பதற்குக் காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? நீ பெருஞ்செல்லவத்துக்கு உரியவளாய்ப் பிறந்திருக்கிறாய். மணமாகும் வரை அந்தச் செல்வத்தை நீ கைக்கொள்ள முடியாது. அது உன் தந்தையிடம் தான் இருக்கும். நீ தந்தையைக் கண்டால் விரைவில் நல்ல மனஉறவு ஏற்பட்டு அதன் பயனை நீ அடைந்து விடக்கூடும். இன்று அதைப் பிறர் துய்க்கவிரும்புவதால்தான் உன்னை அண்டவிடாமல் செய்கின்றனர். ஆயினும் நீ அவரைப் பார்த்தாலும் மிகுதி பயன் இராது. அவர் தற்சார்புடையவராயில்லை. ஆகவே, நீ வீண் உணர்ச்சிகளில் காலந்தள்ளாமல், நீயாகவே திருமணம் செய்துகொள்ளப் பார்; அதன் பின் உனக்குத் துணை யார் என்று நீ தேட வேண்டியிராது. உன் துணையை யாவரும் நாடுவர். நீ இன்று கண் கலங்குகிறாய். நாளை இந்நிலையை எண்ணி நான் சிரிக்க வேண்டிவரும் என்றார்.

லாரைனின் கலங்கிய உள்ளத்தில் குருவின் சொற்கள் சிறிது தெளிவு தந்தன. அது வெறும் அறவுரையன்று; தன் எதிர்கால வாழ்க்கைக்கு ஓரளவு வழிகாட்டுவது என்று உணர்ந்தாள்.

ஆனால், வழி தெரிந்ததேயன்றி, அதற்கான வாயில் எதுவும் காணோம். வழியும் தற்போது எளிதாயில்லை. தனக்கு ஒரு தமக்கை இருக்க, தான் தன் காரியத்தை முதலில் நினைத்தலாகாது என்று அவள் மீண்டும் அமைந்தாள். தன்னறிவற்ற அத்த மக்கையைத் தான் பார்ப்பது போல, கண்ணாகப் பாவித்துப் பேணத்தக்க ஒரு கணவனைக் கண்டுபிடித்து அவளை மணம் செய்விக்க வேண்டுமே என்று அவள் கவலைப்பட்டாள். தமக்கைக்கும் தன்னை ஒத்த செல்வம் இருப்பதால், குரு கூறிய இடையூறுகள் தன்னைவிட அவளுக்கு இன்னும் மிகுதி என்பதையும் அவள் எண்ணிப் பார்த்தாள். தமக்கை மணமானால்,