உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

31

ஒருநாள் உணவு வேளை பார்த்து லாரைன் தந்தை வீடு சென்றாள். வழக்கம்போல, பணியாள் ‘பெரோன் வீட்டிலில்லை' என்றான்.

லாரைன்: வீட்டிலில்லையா? நான் வருவதாகத்தான் அவருக்குத் தெரியுமே! முன்கூட்டி எழுதிவிட்டுத்தானே வந்திருக்கிறேன்.

பணியாள்: அம்மா! நான் உங்களிடம் என்ன சொல்வேன்! தந்தை வெளியே போயிருக்கிறார் என்று தங்களிடம் கூறத்தான் எனக்கு உத்தரவு. நான் வேறு எதுவும் செய்ய வழியில்லை.

லாரைன் நிலைமையை உணர்ந்து கொண்டாள், தந்தையைக் காண முடியாவிட்டால், அவருக்கு உண்மையான நண்பர் யாரையாவதுதான் காணவேண்டும். ஆகவே, “சரி, தந்தையின் குடும்ப குருவை நான் பார்க்கலாமா?” என்று கேட்டாள். பணியாள் "அது என்னால் செய்யக்கூடும். அவரை இதோ அனுப்பு கிறேன்” என்று சொல்லி உட்சென்றான்.

சிறிது நேரத்துக்குள் நல்ல நாகரிக ஆடையுடுத்த ஒரு வெண்தாடிப் பெரியார் அங்கே வந்தார். அவர் லாரைனிடம் அன்பாக "என்ன அம்மணி! நலமாயிருக்கிறாயா? ஏன் கவலைப் படுகிறாய்?" என்றார்.

லாரைன் அவரை வணங்கித் தன் துயரங்களையெல்லாம் எடுத்துக் கூறினாள். "உலகில் எனக்கிருக்கும் செல்வம், உறவு, அவாக்கள் எல்லாம் என் தந்தை ஒருவர்தாம். அத் தந்தையைக் கூடக் காணமுடியாத பாவியாயிருக்கிறேன். மாண்ட அன்னை என் துயரை ஒரு வேளை அறிந்து உதவினாலும் உதவலாம் போலிருக்கிறது. உயிருடனிருக்கும் தந்தை என்னைக் கண்டு ஆறுதலளிக்கக் கூட முடியாதவராயிருக்கிறார்” என்றாள்.

அவள் துயரமே உருவெடுத்து வந்தாற் போலத் தோற்ற மளித்தாள்.அவளைக் கண்ட எவருக்கும் கனிவு தோன்றாமலிராது. அவள் கண்களில் நீர் பெருகி வழிந்தது. அடர்த்தியான அவள் நீல நிறக் கூந்தல் அவள் தோள்களையும் முதுகையும் மறைத்துப் புரண்டு கிடந்தது. பனித்திரையிலும் முகில் கூட்டத்திலும் மறைந்தொளிலும் வெண்மதிபோல் அவள் முகம் பொலிவிழந்து வாடியிருந்தது.