உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

அப்பாத்துரையம் - 30

கிழவியின் கண்கள் பன்னிறக்கவர்ச்சியுடைய அப் பூங்கொத்துக் கள் மீது பட்டன. அவள் உடனே “உனக்கு எவ்வளவு திண்ணக்கம், என்முன் இம் மலர்களைக் கொண்டு வர! மலர்களின் மணம் வீசினால் எனக்கு மண்டையிடி வந்துவிடும் என்று உனக்குத் தெரியாதா?" என்றாள்.

"அவைகள் மெய்யான மலர்களல்ல, பாட்டி. இதோ பாருங்கள்! அவை மலர்கள் போலச் செய்யப்பட்ட தாள் வேலையே!” என்றாள்.

"என்னிடம் வாதம், விளக்கம் எதுவும் வைத்துக் கொள்ளாதே. நாற்றம் பொறுக்க முடியவில்லை. அதை அப்படியே பலகணியின் வழியாக வெளியே எறிந்து விடு!”

"எறிவானேன் பாட்டி! வீட்டிற்கு கொண்டுபோய்..”

மாது பிளான்ஸி அவள் பேசி முடிவதுவரைப் பொறுக்க வில்லை. பூச்செண்டைக்கையிலிருந்து பறித்துப் பலகணி வழியாக வீசியெறிந்தாள். அவை சேற்றில் விழுந்து கசங்கி நைந்தன. பின்வரும் வண்டி சக்கரம் அவற்றைச் சேற்றுள் அமுக்கிக் கரைத்து விட்டன.லாரைன் உள்ளத்தின் கிளர்ச்சிகளும் அத்துடன் நைந்து போயின.

பாட்டிவீட்டின் கசப்பறிந்து தந்தையிடம் தன் குறைகளைக் கூற எண்ணினாள் அவள். “என்னைப் பற்றி அக்கரை கொள்ள என் தந்தையைத் தவிர உலகில் வேறு யார் இருக்கிறார்கள்? அவர் என்னை நேரில் கண்டால் ஏதாவது கட்டாயம் வழி செய்வார்” என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

ஆனால், தந்தையை அவள் பார்க்கவே முடியவில்லை. அவள் வரும் எண்ணத்தை மாற்றாந்தாய் அவரிடம் திரித்துக் கூறியிருந்தாள். அவளுக்குத் தந்தையிடத்தில் இம்மியளவும் பாசமில்லை யென்றும், தன் செல்வத்தை நயமாக இப்போதே தன் கைக்குக் கொண்வர வேண்டுமென்னும் சூழ்ச்சியுடன் தான் நேரில் பார்க்க விரும்புகிறாள் என்றும் திரு. பெரோன் நம்பும்படி அவள் கூறியிருந்தாள். ஆகவேதான் லாரைன் சென்ற போதெல்லாம் தந்தையில்லை என்ற மாற்றம் பணியாள் மூலம் தெரிவிக்கப் பட்டது.