உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கைம்பெண்

மன்னன் பதினைந்தாம் லூயி தன் நாணத்தையும் தன் இறுமாப்பையும் உடன்கொண்டு இயற்கை வாழ்வெய்தினான். மன்னன் பதினாறாம் லூயி ரேயிம்ஸ் தலைக் கோயிலில் பேரார வாரத்துடன் முடி சூட்டப்பெற்றான் இதுவே ஃபிரான்சின் கடைசி மன்னரின் முடிசூட்டு விழா என்பதை உணர்ந்தவர்கள் போல, ஃபிரஞ்சுப் பெருமக்கள் இதில் தங்கு தடையற்று தம் ன்பக் கேளிக்கைகளில் மிதந்தனர். இப்போது அவர்களுக்கு வாய்ந்த அரசி மேரி அந்தாய்னெட் இக்கேளிக்கை ஊழிக்கு எல்லா வகையிலும் ஏற்ற தலைவியாயமைந்தாள். அவள் அழகு ஃபிரஞ்சு அரசிகளுக்குள் கூட முன் என்றும் கண்டு கேட்டிராத ஒன்றாயிருந்தது. அவள் ஃபிரான்சின் அரசியாக மட்டுமில்லை; அழகுக்கும் காதலுக்கும் அரசி போலவே காணப்பட்டாள். உண்மையில் அரசி என்ற பெயருக்கு ஒரு சிறிது இழுக்கும் தரும் அளவுக்கு அவள் இன்ப வாழ்வு சென்று அவ்வெல்லையில் நின்று கலையரசி, காதலரசி என்ற பட்டங்களுக்கும் நாட்டரசி என்ற பட்டத்துக்கும் இடையே ஊசலாடுவதாயிருந்தது. மற்ற எந்த அரசியும் செலவு செய்யாத பெரும் பொருள் அவள் அரண்மனைக் கேளிக்கையின்ப வாழ்வில் செலவாயிற்று. பெருமக்கள் அதில் பங்கு கொண்டனர் - பொதுமக்கள் தெரிந்தும் தெரியாமலும் இவ்வெல்லாச் செலவுகளுக்கும் இறையிறுத்தனர்.

மன்னவையின் இன்ப வாழ்வில் பொது மக்கள் கருத்துச் செல்லவில்லை. ஆனால், பெருமக்களுக்கோ அதில் பங்கு கிடைத்ததுடன், அதுபற்றிக் கவலையின்றிப் பேசி வம்பளக்கவும், அரசி கட்சி, அரசி எதிர்க்கட்சி எனப் பிரிந்து உள்ளூறப் பூசலிடவும் வாய்ப்பு ஏற்பட்டது.இந்த இன்ப வாழ்விலும் பூசலிலும் ஃபிரெஞ்சுப் பெருமக்கள் நேர்மை, வாய்மை, அமைதி ஆகியயாவும்