உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அப்பாத்துரையம் - 30

கெட்டு வந்தன. பொதுமக்கள் பார்வையில் அவர்கள் தம்மையுமறியாமல் தம்மை இழிவுபடுத்திக் கொண்டு வந்தனர்.

இவ்வாய்மை வாழ்வுச் கிடையில் அதன் கலைப் பண்புடன் முற்றிலும் முரண்பட்டுவிடாமல், ஆனால் அதிலிருந்து எண்ணெயினிடையேயுள்ள தண்ணீர்த்துளிகள் போலத் தனிப் பட்டுப் பிரிந்து வாழ்ந்தனர். சிராம்மோன் துணைவர். பெரு மக்களிடையே பெருமக்களாக அவர்கள் நடமாடினர்; ஆனால், அவர்கள் வாழ்வு எளிமையும் நற்பண்பும் கெடாதிருந்தது.சிறப்பாக மாது சிராம்மோன் வகையில், அவள் உடையும் பெருமிதத் தோற்றமும்தான் அவள் உயர்குடியைக் காட்டினவே தவிர, அவள் அறிவு, ஒழுக்கம், பணிவு, கடமையுணர்ச்சி, அன்பு ஆகியயாவும் அக்குழுவினுக்கு அப்பாற் பட்டவையாயிருந்தன.

பூசல், உட்பூசல், பொய்மை, உட்பகைமை ஆகியவை நிறைந்த மன்னவைக் குழாத்திடையே அரசியின் கண்கள் அடிக்கடி அன்பாதரவுக்கும் அமைந்த அறிவுரைக்கும் சுவைமிக்க உரையாடலுக்கும் மாது சிரோம்மோனையே நாடின. இன்ப வாழ்வில் தோய்ந்திருந்தும் அவள் உள்ளம் முற்றிலும் நச்சி படாது இருந்தது. சூழல்கள் அவளை ஈர்த்திராவிட்டால், அவளும் மாது சிரோம்மோனின் முன்மாதிரியைப் பின்பற்றி யிருக்கக் கூடும். ஆனால், மாது சிரோம்மோனை அவள் அடிக்கடி காணக்கூட முடிவதில்லை. அவள் அவ்வப்போது அரசியைப் பார்ப்பதுண்டானாலும் அவள் நேரம் பெரும் பாலும் தன் குழந்தைகளைப் பேணுவதிலும், தன் கணவனின் பெருஞ் செல்வத்தை மேற்பார்வையிடுவதிலும் சென்றது. இத்துடன் மணமாகி ஆறாண்டுக்கு மேலாகி விட்டதால், சிராம்மோனின் உடல் முதுமைக்கும் நோய்க்கும் படிப்படியாக இரையாகி வந்தது. முடிசூட்டி விழாவில் அவர் கலந்துகொள்ள முடியவில்லை.மாது சிராம்மோன்கூட அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல், மன்னவை செல்வதும் தன்மனை வருவதுமாக இருந்தாள்.

ஆனால், முடிசூட்டு நாளில் அவள் பெரும் பகுதியையும் மன்னனவையிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. அவளுக்கு அவ்வளவு பொறுப்பு அவ்விழாவில் ஏற்பட்டது. அவள் ரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்ட பின்னும் இன்னும் அவள் பாரிஸின் அழகரசிகளுள் முதல் வரிசையிலேயே