உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 31

கூறியுள்ளார். இதன் பயனாகவே 'மீரீமகள்' என்ற நாவலின் ஆசிரியர் வரலாற்று ஆராய்ச்சி விளக்குபவராக அமையா விட்டாலும், மனித தத்துவ, சமுதாயத் தத்துவத் துறைகளில் கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆராய்ச்சியாளராகவே விளங்க நேர்ந்துள்ளது. உண்மையில் சமுதாய சாஸ்திரக் குறிப்பு களடங்கிய அவருடைய பணித்துறைக் குறிப்பேட்டிலிருந்தே ‘மீரீ மகள்' ஜன்மம் எடுத்துள்ளது என்று கூறலாம்.

இந்த நாவல் 1894-இல் ஆசிரியர் நடத்திய ஒருபடகு யாத்திரையை மைய வரைச்சட்டமாகக் கொண்டே இயற்றப்பட்டது. இது பற்றித் தம் வாழ்க்கைக் குறிப் பேட்டில் அவரே கீழ் வருமாறு எழுதியுள்ளார்.

“அலுவல் பெட்டியிலிருந்த தாளும் பேனாவும் எடுத்து, தலையணையையே மேசையாகக் கொண்டு நான் எழுதத் தொடங்கினேன். என்னதான் எழுதுவது என்று சிந்தித்தேன். அப்போது நான் படகு யாத்திரையில் தான் ஈடுபட்டிருந்தேன். ஆதலால் முதல் முதலாக மீரீ மக்களின் படகு யாத்திரைச் செய்தியே நினைவில் மிதந்து வந்தது. அக்காட்சியுடன் காட்சியாகவே, வட எக்கீம்புரத்தின் இயற்கைத் தோற்றங்கள், சோவன் சிரீ ஆறு ஆகியவையும் மீரீ சமுதாயத்தின் மதச் சடங்கு முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், மணவினைப் பாங்குகள், போக்கு வரவு நடவடிக்கைகள், சமுதாய ஆசாரங்கள் ஆகியவையும் இடையிடைக் காட்சிகளாக வந்தன. அவற்றோடு வழக்கு மன்றங்களினுள் வந்து வழக்காடிக் கொண்டு வரும் மீg இன இளைஞர், இள நங்கையரின் நினைவுச் சித்திரங்களும் வந்து தலை காட்டின. கூடவே விழாப் பாடல்களும் அகச் செவியினுள் முரல்வுற்றன. இவற்றைத் தீட்டப் பேனாவும் முனைந்தது. பேனாவுக்கு என்ன தெய்விக அகத் தூண்டுதல் ஏற்பட்டதோ, அந்தப் படகில் உலவிய நிலையிலேயே, இரண்டு நாட்களுக் குள்ளாக, ‘மீரீ மகள்' என்ற நாவல் எழுதப் பெற்று முடித்து விட்டது.

>>

இந்த நினைவுகள் இந்த நாவலில் ஆசிரியருள்ளத்தில் எப்போதும் நிலையாக உலவுகின்றன. இதன் கதைப் பகுதியும் சரி, வரலாற்றுப் பகுதியும் சரி- மீரீ மக்களின் வாழ்க்கையைப் போலவே தெள்ளத் தெளிவாக, எளிமையாக அமைந்துள்ளது.