உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

7

இந்நாவலில் கதையாசிரியர்கள் கையாளும் கதைச் சிக்கல்கள் எதுவும் கிடையா. மீரிமக்களின் எளிய இயற்கைக் குடியரசுச் சமுதாயத்திற்குரிய காதல் வீரக் காப்பியமாகவே இது இயல்பாக அமைந்துள்ளது என்பதே ‘மீரீ மகள்' நாவலின் உளங்கவரும் சௌந்தரிய ராசியின் இரகசியம் என்னலாம்.

நாவல் போன்ற அகன்றதோர் இலக்கிய அருங்கலைப் படைப்பினை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வடிவு பெயர்ப்பதென்பது எளிதான காரியமன்று. அதிலும் சமுதாயப் பின்னணியும் தாய்நில இயற்கை அழகு நயங்களும் மொழியுடன் மொழியாகப் பின்னி இழைந்துள்ள ஓரு மூல நாவல் வகையில், இம்முயற்சி இன்னும் சிக்கல் வாய்ந்ததாகும். குறிப்பிட்ட இந்நாவல் வகையில் மூல நூலுக்குரிய தனியழகையும் கவர்ச்சியையும் மொழிபெயர்ப்பு எந்த அளவில் புத்துயிர்ப் படுத்திக் காட்டியுள்ளது என்பது வாசகர்களின் மதிப்பீட்டுக்கே ரியது.இச்சமுதாய நாவலை இந்தியிலும் (தற்போது தமிழிலும்) மொழி பெயர்த்து அதற்குரிய இரசிகர் குழாத்தின் தொகையைப் பெருக்கி அந்த ஜனச முதாயத்திற்குரிய இச்சிற்றோருவியத்தைத் தமிழ் நாட்டு மக்கள் கண் முன் கொண்டு வந்த சாகித்திய அகாதெமியின் சேவை போற்றுதலுக் குரியதாகும்.

குவாஹா பல்கலைக் கழகம்,

பிரிஞ்சி குமார் பருவா.

குவாஹாடீ (அசாம்)