உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

17

பற்றிய வண்ணமாய் இருக்கும். பல்தலை நீர்ப் பாம்புகள் நீருள் தம் நச்சு நாக்குகளால் புழையைத் துழாவியபடியே சுழலும். இவற்றிலிருந்து தப்பி மேற்செல்ல ஒரே ஒருவழிதான் உண்டு. சுழியிலிருந்து புழையில் தயங்காமல் தலைகுப்புற விழவேண்டும்.

“அடி நிலக் கடலில் ஆழ்கடலணங்கு வாழ்கிறாள். அவள் மாயம் வல்லவள். அவளால் கடல்மனிதரை நிலவுலக மனிதராகவும், நிலவுலக மனிதரைக் கடல் மனிதராகவும் ஆக்க முடியும். ஆனால், கடல் மனிதர் நிலவுலக மனிதராகும்போது அவர்கள் வாழ்நாளைஅவள் பெற்றுக் கொள்வாள். அவர்கள் வாலையும் அவள் தன் வாலாக்கிக் கொள்வாள். இதனால் இப்போதே அவளுக்கு ஆறுவால் ஒரே உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அறுவர் வாழ்நாளையும் பெற்று ஆயிரம் ஆண்டுக்குமேல் அவள் வாழ்ந்து வருகிறாள். உன் வாலையும் வாழ்நாளையும் பெற்றால் அவள் ஏழு வாலுடன் இன்னும் முந்நூறு ஆண்டு வாழ்வாள். வாலினிடமாக, அவள் இரண்டு அவள் இரண்டு வால்களை மாயத்தால் காலாக்கி உனக்கு ஒட்டுவாள். அவை பிறர் கண்களுக்குக் கால்களாயிருக்கும். ஆனால் உனக்கு அவை வால்களாகவே இருக்கும். அவற்றின் நுனிமீதே உன் சதை உடற்பகுதி அமையும். நிற்கும் போதும், இருக்கும் போதும், நடக்கும் போதும் அவை உனக்குச் சொல்ல முடியாத வேதனை தரும். அத்துடன் அந்த வேதனையைப் பேசா நாவுடனேயே நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்.

"உன்னை இப்பேரிடரில் அனுப்ப வேண்டி வந்ததே என்று நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை நீ அறிய மாட்டாய். ஆனால், உன் உள்ளம் விட்டவழி செல். கடல் தெய்வம் உன்னைக் காக்கட்டும்" என்று அத்தை அன்பு கனிந்த உருக்கத்துடன் பேசினாள்.

கட்டிளமைவிழாவின் ஆரவாரம் எதுவும் இப்போது இல்லை. ஆனால் கடல்மைந்தர், கடல் நங்கையர் யாவரும் கூடினர். நும் இளவரசிக்கு ஆராத்துயருடன் விடை கொடுத் தனுப்பினர். ஒரு மின்சார விலாங்கின் மீதேறி அவள் தென்மா கடலின் நடுவிடம் சென்றாள்.

கடல் சுழன்று சுழன்று எரிமலையின் உச்சி மீதுள்ள கெலிபோன்ற ஒரு புழையில் முடிவுற்றது. இளவரசன் எழிலுருவம்