உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

31

உணவிலும் சிறிது கொடுத்து உண்பித்தான். அருகிலிருந்த ஓடையில் சென்று, தேக்கிலையில் நீர் மொண்டுவந்து கொடுத்தான். கிழவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் இளஞ்சாத்தனை உளமார வாழ்த்திச் சென்றான்.

காட்டுவழியாக அவன் சென்று கொண்டிருந்தான். பின்னால் ஒரு பாட்டுக்குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அது அவனைப் போலவே ஒரு வழிப்போக்கன். “தம்பி, நீ எங்கே போகிறாய்?” என்று அவன் கேட்டான். இளஞ்சாத்தனும் அவனிடம் அன்பு காட்டினான். “நான் பொருள் தேடித் தொலைவிடம் செல்கிறேன். அண்ணா! எனக்குத் தாயும் இல்லை. தந்தையும் இல்லை. ஆனால் உலகம் பரந்தது. கடவுள் எப்படியும் ஒரு வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் போகிறேன்" என்றான்.

66

கடவுள்தான் என்னை உன்னிடம் அனுப்பியிருக்க வேண்டும்" என்று கூறி வழிப்போக்கன் சிரித்தான். “எனக்கு ஒரு நல்ல துணை அகப்பட்டது.தனியாக நடந்தால் வழிதொலையாது. ஒரு துணைவனுடன் செல்வது பயணத்தின் சோர்வைக் குறைக்கும்” என்றான் அவன்.

இருவரும் மிக எளிதில் பழகிவிட்டனர். வழிப்போக்கன் இளஞ்சாத்தனைவிட ஆண்டில் முதியவனாய் இருந்தான். ஆனால் உடல் வலுவிலும் திறமையிலும் அவன் இளஞ்சாத்தனுக்கு எவ்வளவோ மிச்சமாய் இருந்தான். அவன் உள்ளம் இளமை மிக்கதாகவே இருந்தது. இளஞ் சாத்தனுக்கு அவன் வந்தது முதல், பயணம் பயணமாகவே தோன்றவில்லை. அது ஓர் உலாப்போல் எளிதாயிற்று.

ன்ப

வழிப்போக்கன் பெயர் கேட்டதும் இளஞ்சாத்தன் இன்னும் களிப் படைந்தான். வழித்துணை வேலன் என்பதே அது. அவன் செயலுக்கும் குணத்துக்கும் அப்பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

உச்சி வேளையில் அவர்கள் ஒரு மரத்தடியில் இளைப்பாறி இருந்தனர். அச்சமயம் அவ்வழியே ஒரு கூனி தளர்நடையுடன் வந்தாள். அவள் முதுகின்மீது ஒரு பெரிய விறகுக்கட்டைஇருந்தது. நண்பர்கள் இருந்த இடத்துக்கு அருகே வந்ததும். அவள் கால்