உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 32

நாள்தான். இதே வெற்றி நாளையும் கிட்ட வேண்டும். கடவுளே” என்று அவன் மனமார வேண்டினான்.

மூன்றாம் நாளிரவு இடியும் மின்னலும் இன்னும் கடுமையாக இருந்தன. வழித்துணை வேலனும் அன்று தன் முழுவலுவும் வருவித்து அவள் போக்கைத் தடுக்க முயன்றான். இன்று அவளும் வலுவிழந்தே இருந்தாள். பலதடவை வழியில் பாறைகளில் தங்கித்தங்கி இளைப்பாறிச் சென்றாள்.

அன்று மாயாவியின் முகத்தில்கூடச் சிறிது கவலை நிழலாடிற்று. "எனக்கெதிரான ஏதோ ஒரு சக்தி இரண்டு நாள் வேலை செய்திருக்கிறது. ஆயினும் நீ அஞ்ச வேண்டாம். இன்று அதை ஒழித்துவிடுவேன்” என்று அவன் கூறினான்.

அன்று இரண்டு யாமம் அவர்கள் உண்டாடினர். ஆனால் இரண்டு யாமமும் மாயாவியின் மூளை சிந்தித்துக் கொண்டே யிருந்தது. இளவரசி திரும்பும்போது. அவன் அவளுடன் புறப்பட்டான். பாறை கடந்தபோதும் அவன் விடை சொல்ல வில்லை. அவன் அவளைப் பின்தொடர்ந்து பறந்தான். வழித்துணை வேலனின் கழி, இருவரையும் மாறிமாறி அடித்தது. இளவரசியைப் போலவே, அவனும் அவற்றை ஆலங்கட்டிகள் என்று எண்ணினான். ஆனால் அவற்றால் இருவர் வலுவும் குறைந்து வந்தது. இளவரசி தலையில் கட்டியிருந்த நீலச் சவுக்கம் இச்சமயம் காற்றில் நெகிழ்ந்தது. வழித்துணைவேலன் அதைப்பற்றி இழுத்தான். அடுத்தகணம் அவள் கண்களுக்கு அது தெரியவில்லை. ஆவி வடிவான வழித்துணை வேலன் ஆடைக்குள் அது மறைந்தது.

று

ளவரசி பலகணியைத் திறந்தாள். உட்சென்றாள். மாயாவி அப்போதும் விடை சொல்லவில்லை. பலகணிக்குள் அவள் சென்றபின் அவள் காதில் "என் தலை" என்று கூறிவிட்டுத் திரும்பினான்.

இளவரசி உடல் அரண்மனைக்குள் மறைந்தது. பலகணி அடைத்தது. மாயாவி ஒருபுறம் அவளைப் பார்த்துக்கொண்டே மறுபுறமாகப் பறந்து எழுந்தான். வழித்துணைவேலன் அச்சமயத்துக்கே காத்திருந்தான். அவன் இடையில் தொங்கிய வாளை உருவினான். மாயாவியின் உடல் பறந்தது. ஆனால் தலை உடலைவிட்டுப் பிரிவுற்றது.