உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

41

இளவரசியின் நீலச்சவுக்கத்தை ஏந்தி வழித்துணைவேலன் மாயாவியின் தலையை அதில் ஏற்றான். ஆதில் அதைச் சுற்றிக் கட்டினான். ஒன்றும் தெரியாதவன் போல அந்த மூட்டையுடன் அருந்தகத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

ன்

இளஞ்சாத்தனிடம் வழித்துணைவேலன் வழக்கம் போலப் பேசினான். "அன்பனே, இன்று நான் கனவு ஏதும் காணவில்லை. இது வியப்பாகத்தான் இருக்கிறது. ஆயினும் என்னருகில் காலையில் இந்த மூட்டையைக் கண்டேன். நீ இதை இப்படியே வைத்துக்கொள். என்ன நினைக்கிறேன்? என்று இளவரசி கேட்டவுடன், நீ எதுவும் சொல்ல வேண்டாம் ‘இதுதான்' என்று கூறி இந்த மூட்டையைத் திறந்து காட்டிவிடு. மற்றவை தெய்வம் விட்டவழி ஆகட்டும்” என்றான்.

வெளிநாட்டார்கூட

>>

மூன்றாம்நாள், “வியத்தகு’ ளைஞனைப் பார்க்க நகரத்தில் வந்து குழுமினர். ஆகவே அன்று அரசன் கொலுவை நகர்ப் பொதுவிலேயே கூட்டினான். ளவரசியின் முகத்தில் அன்று ஈயாடவில்லை. அவள் குரல் முற்றிலும் கம்மியிருந்தது. ஆயினும் அன்றைய தேர்வில் இளைஞன் வெற்றி பெற முடியாது என்ற எண்ணம் அவளுக்குத் தெம்பளித்தது. அவள் மாயாவியின் தலையை உள்ளத்தில் பாவனை செய்து கொண்டாள். “நான் என்ன நினைக்கிறேன்?” என்று கேட்டாள்.

66

55

“இதுதான்” என்ற சொற்களுடன், இளஞ்சாத்தன் கையிலுள்ள மூட்டையை அவிழ்த்தான். உள்ளிருந்த கோர உருவத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. வாழ்வில் முதல் தடவையாக அவன் திகில் கொண்டான். அரசனும் மக்களும் அவனைப் போலவே திகைத்து நின்றனர். ஆனால் இளவரசி “ஆ’ என அலறி விழுந்தாள். எல்லாரும் தம் திகைப்பை மறந்து, அவள் பக்கம் திரும்பினர். பாங்கியர் முகத்தில் நீர் தெளித்து விசிறினர். அவள் கண்விழித்தாள். அவள் முகத்தில் உணர்வு மீண்டது. அத்துடன் முன்னில்லாத ஓர் ஒளியும் பரவிற்று. அவள் நீலக்கண்கள் நாற்புறமும் சுழன்று மெல்ல இளஞ்சாத்தன் மீது தங்கின.

“நீங்கள் சரியாக ஊகித்துவிட்டீர்கள். இனி நான் உங்கள் ருயிர்த் துணைவி, முழு மகிழ்வுடன் உங்களை ஏற்கிறேன்.