உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

இரண்டாவது தட்டில் அவள் வீறிட்டாள்.

77

மூன்றாவது தட்டில் அவள் எழுந்து உட்கார்ந்து, சுற்று முற்றும் பார்த்து விழித்தாள். “நான் எங்கிருக்கிறேன். எமதரும ராசாவே!” என்றாள்.

"நான் எமதரும ராசாவல்ல. உன் கணவன், இவர்கள் எமகிங்கரர்கள் அல்ல. உன் அண்ணன்மார்கள். இதோ பார்" என்று திம்மப்பன் கல்லைக் காட்டினான்.

அவள் அந்தக் கல்லை வாங்கி முத்தமிட்டாள். “இந்தக் கோபக்காரக் கணவனைக் கட்டிக் கொண்டேன்: நீ மட்டும் இல்லாவிட்டால், நான் எப்படி இந்த மாதிரிச் செத்துச் செத்துப் பிழைக்க முடியும்” என்றாள்.

அத்துடன் அவள் கணவன் காலைத் தடவிப் பார்த்தாள். "ஐயோ, நான் அரிவாள்மணையால் காலை வெட்டிவிட்டேனே! அந்தக் காயம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

திம்மப்பன் சிரித்தான். "முதலில் மந்திரக் கல்லை என் காலுக்குப் பயன்படுத்திய பின்புதான் உனக்குப் பயன்படுத்தினேன். ஆனால், இப்போது கூட உனக்கு உயிர் தந்திருக்க மாட்டேன்.இரண்டுநாள் செத்துக் கிடக்கட்டும் என்று விட்டிருப்பேன். உன் அண்ணன்மார்கள் தங்கையைக் கொன்றதற்காக என்னைக் கொல்ல வந்தார்கள்” என்றான்.

செல்வி திருடர்களைப் பார்த்து இனிய உரைகளால் வரவேற்றாள்.

"அண்ணன்மாரே! இவர் எப்போதும் இப்படித்தான் செய்கிறார். ஆனால் இந்த மந்திரக்கல் இருப்பதால்தான் நான் இறந்து வாழ்கிறேன். அவருக்கு, கொன்ற பிற்பாடு கோபம் போய்விடும், என்னைத் திரும்பவும் பிழைக்க வைத்து விடுவார். அஃதிருக்கட்டும், வீட்டில் அண்ணிமார் எல்லாரும் நலந்தானே" என்று நயமாகத் தேனொழுகப் பேசினாள்.

திருடர்கள் இப்போது மந்திரக் கல்லில் சொக்கிவிட்டனர். மற்றப் பழைய செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் மந்திரக் கல்லுக்குப் பேரம் செய்யத் தொடங்கினார்கள்.