உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

||–

அப்பாத்துரையம் - 33

செல்வி கையில் ஓர் அரிவாள்மணை இருந்தது. "இதனால் உன்னை வெட்டிவிடுவேன். என் பக்கத்தில் வராதே" என்றாள். அத்துடன், “ஆகா! அண்ணன்மாரை ஏய்த்ததுபோல என்னையும் ஏய்க்கவா பார்க்கிறாய்? இதோ உன்னைக் கொன்று தீர்த்துவிட்டு, மறுவேலை பார்க்கிறேன் பார்" என்று கூவினாள்.

திருடர்கள் தங்கள் கோபத்திலும் சிறிது தயங்கி நின்றார்கள்.

அவை

தடார் தடார் என்று அடிகள் கேட்டன. உண்மையில் திம்மப்பன் சுவர் மீது அடித்த அடி உதைகள், ஆனால் செல்வி, "ஐயோ! அட பாவி!” என்றாள்.

அரிவாள்மணை 'கணீர்' என்று விழுந்த அரவம் கேட்டது. திம்மப்பன், “ஆ சண்டாளி, என் விரலை வெட்டி விட்டாயே! உன்னை இதோ என்ன செய்கிறேன் பார்!" என்று இரைந்தான், மீண்டும் ‘திண் திண்' என்ற ஓசை கேட்டது.

66

என் மண்டை போச்சு" என்று சொல்லிச் செல்வி விழுந்தாள்.

அவள் இறந்தவள் போலப் பேச்சுமூச்சற்றுக் கிடந்தாள்.

"ஐயையோ, மனைவியைக்கொன்றுவிட்டேன், இனி என்ன செய்வேன்? மைத்துனன்மார் வந்தால் என்ன சொல்வேன்?' என்று அவன் படபடத்தான்.

திருடர் இச்சமயம் தடதடவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் பழைய கோபத்தை மறந்தனர். செல்வி கொலைக்குப் பழி வாங்கப் போவதாகப் பாவித்தனர்.

திம்மப்பன் அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டான். "மைத்துனமாரே! உங்கள் தங்கை உயிரை பிழைக்க வைத்து விடுகிறேன்:என்னை மன்னியுங்கள்” என்றான்.

66

செத்தவளை எப்படியடா பிழைப்பிக்க முடியும்?" என்றார்கள் திருடர்கள்.

அவன், மாடத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். செல்வியின் மூக்கை அதைக் கொண்டு மூன்று தட்டு தட்டினான். முதல் தட்டில் உடல் விறைத்தது.