உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

75

அவர்கள் முன் ஏமாறியதையெல்லாம் மறந்தனர். இப்போது மந்திரக் கோலைப் பெறும் நப்பாசையில் சிக்கினர்.

இத்தடவை திம்மப்பன் முன்னிலும் மிகுதியாக பிகுச் செய்தான். அத்துடன் செல்வியும் இப்போது தலையிட்டாள். "ஐயோ கோலைக் கொடுத்துவிட்டால் நானல்லவா இரவும் பகலும் குறுக்குமுறிய உழைக்க வேண்டும்" என்று தடுத்தாள்.

திருடர்கள் ஆயிரம் பொன்வரை உயர்வில் பேசி, அந்த மந்திரக் கோலுடன் வெற்றிகரமாக மீண்டனர்.

"இனி நம் மனைவியரை எதிர்பார்த்து வாழ வேண்டிய தில்லை” என்ற எண்ணத்துடன் அவர்கள் தங்கள் நடையைக் குதிரை நடையாக்கினர்.

வீட்டுக்குச் சென்றதும் தம் மனைவியரை ஆர்ப்பாட்டத் துடன் அழைத்தனர்.

"இதுவரை நீங்கள் எங்களுக்கு உணவு உண்டு பண்ணித் தந்தீர்கள். இப்போது பாருங்கள், உங்களுக்கு நாங்கள் தருவதை! உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? வடை வேண்டுமா? அப்பம் வேண்டமா, எள்ளுகுண்டை வேண்டுமா?" என்று கேட்டனர்.

எல்லாரும், “எள்ளுருண்டை வேண்டும்" என்றார்கள். மூத்தவன் தன் மடியில் இருந்த மாயக்கோலை எடுத்தான். அங்குள்ள செடி கொடிகள் ஒவ்வொன்றாகத் தட்டினான்.

ஒன்றிலிருந்தும் எள்ளுருண்டை விழவில்லை.

கணவன்மார் தங்களைக் கேலி செய்கின்றனர் என்று எண்ணி மனைவியர் கோபம் கொண்டு அவர்களை வைதனர்.

சீற்றமும் அவமானமும் அவர்களைப் பிடுங்கித் தின்றன. அவர்கள் திம்மப்பனையும் செல்வியையும் கொன்று கிழித்து விடுவதாகச் சூளுரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தனர்.

இத்தடவை இன்னுரைகள் பயன்பட மாட்டா என்பது திம்மப்பனுக்குத் தெரியும். செல்வியுடன் அவன் ஆழ்ந்த சிந்தனை செய்து எதிர்பாராத முறையில் திட்டம் வகுத்தான். அவர்கள் வருமுன்பே ஒருவரை ஒருவர் எதிர்த்துச் சண்டையிடுவதாகப் பாசாங்கு செய்தனர்.