உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 33

அவள் கண்ணை விழிக்காமலே அருகிலிருந்த ஒரு கோலைத் தூக்கி வீசினாள். “இது என்ன புதுப் பைத்தியம்?” என்று திருடர்கள் ஆர்வத்துடன் விழித்தனர்.

செல்வி சற்றுமுன்தான் எழுந்து சென்று, செடி கொடிகளை மூடியிருந்த துணிகளைத் திறந்து வைத்திருந்தாள். அவள் சோம்பல் உண்மையில் திம்மப்பன் திட்டங்களின் ஒரு பகுதியேயாகும்.

திம்மப்பன் கோல்கொண்டு செடி கொடிகளைத் தட்டினான். பலவகைத் தின்பண்டங்கள் விழுந்தன. அவன் அவற்றை இலைகளில் சிறுசிறு சிப்பங்களாகக் கட்டினான். மொத்தம் ஒன்பது சிப்பங்கள் இருந்தன.

ஏழு திருடர் முன்பும் ஏழு சிப்பங்களை வைத்தான். தான் ஒன்றை வைத்துக் கொண்டான். ஒன்றை மனைவியின் படுக்கையருகிலேயே வைத்து, “சமைக்க எழுந்திருக்காவிட்டாலும் உண்ண எழுந்திரு, சோம்பேறிப் பிண்டமே!" என்றான்.

அவள் எழுந்து பல் துலக்கினாள்.

தின்பண்டங்கள் செடியிலிருந்து விழுந்தாலும், வீட்டில் செய்தவைபோலவே இருந்தன. செய்தது விடிய யாமத்திலாதலால் பலவற்றில் இன்னும் சூடு ஆறவில்லை.

66

ஒரு

"ஆகா! இரவு பனி அடித்திருக்கிறது. தின்பண்டங்களை அவை சூடாக்கியிருப்பதைப் பார்” என்றான். திம்மப்பன்.

66

செல்வியும் அதற்கேற்பப் பேசினாள். “ஆ.. நல்ல பனியில், வெந்த பண்டமாக எனக்கு இன்னும் ஒன்று கொடுங்கள்” என்றாள்.

அவள் அத்துடன் அமையாமல், இன்னும் தின்பண்டம் விரும்புபவள் போல், மாயக்கோல் எடுக்கப் போனாள். அவன் அவளைத் தடுத்து மாயக்கோலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டான்.

66

'விருந்தினராயிற்றே என்று நான்? மாயத் தின்பண்டம் வரவழைத்தால், நீ அதை வைத்துக் கொண்டே சோம்பேறியாகக் காலங் கழிக்கலாம் என்று பார்க்கிறாயா? அதெல்லாம் முடியாது போய் வேலையைப் பார்” என்றான்.