உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

73

தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மனைவிமாரை ஆரவாரத் துடன் எங்கே முயல்? அது வந்து செய்தி

எழுப்பி,

66

சொல்லவில்லையா?” என்றனர்.

66

என்ன முயல்? என்ன செய்தி?" என்று அவர்கள் விழித்தனர்.

“சுண்டைக்காய்க் குழம்பும், பருப்புச் சோறும் சமைத்து வைக்கும்படி ஒரு முயல் வந்து சொல்லவில்லையா?" என்று திருடர்கள் கேட்ட போது, அவர்கள் மனைவியர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

66

'ஆகா! மோசம் போனோம், முன்பே ஏமாற்றியது போதாமல், இப்போதுமா ஏமாற்றினான்? இதோ, இப்போதே போய்த் தொலைத்து வருகிறோம்” என்று அவர்கள் மீண்டும் புறப்பட்டனர்.

அவர்கள் வருகையைத் திம்மப்பன் இப்போதும் எதிர்பார்த்தே இருந்தான். அவன் இப்போது புதிய திட்டம் வகுத்திருந்தான். செல்விக்கும் அதன் விவரம் தெரிவித்திருந்தான்.

செல்வி சில இனிய திண்பண்டங்களை உண்டு பண்ணினாள். திம்மப்பன் அவற்றை அருகிலுள்ள சில செடி, கொடிகளில் ஒட்டித் தொங்க விட்டான். அவற்றின் மீது ஒரு துணியிட்டு மறைத்த பின் அவன் வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டான்.

விடியற்காலமே திருடர் திமுதிமு என்று நுழைந்தனர். திம்மப்பனும் தடதடவென்று எழுந்து இன்னுரைகளுடன் அவர்களை வரவேற்றான். அத்துடன்,“உன் அண்ணன்மார் வந்து விட்டார்கள். செல்வி, எழுந்திரு, எழுந்து விரைந்து காலை உணவுக்குச் சிற்றுண்டி செய்” என்றான்.

அவள் புரண்டு படுத்தாள்; நெளிந்தாள். எழுந்திருக்க

வில்லை.

66

சரிதான். சோம்பேறித் தங்கைக்காக அண்ணன்மார் பட்டினி கிடப்பதா? போகட்டும், நீ எழுந்திருக்கா விட்டாலும், என் மந்திரக் கோலையாவது கொடு. செடியிலிருந்து ஏதேனும் தின்பண்டங்களையாவது வருவித்து என் மைத்துனன்மாருக்குக் கொடுக்கிறேன்" என்று அவன் முழக்கமிட்டான்.